கேது தசா-கேது புத்தி பலன்கள்
கேது புக்தியானது 4 மாதம் 27 நாட்கள் நடைபெறும்.
கேது(Ketu Dasa) நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் பெயர், புகழ் உயரும் அமைப்பு, அரசு வழியில் அதிகாரமிக்க பதவிகளை வகிக்கும் யோகம், எடுக்கும் காரியங்களில் வெற்றி, தருமம் செய்யும் மனப்பான்மை, ஆலய தரிசனங்களுக்காக பயணங்கள் கொள்ளும் வாய்ப்பு, ஆன்மிக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு, நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும்.
கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் மனநிலை பாதிப்பு, கொடூர செயல்களை செய்யும் நிலை, உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களால் வம்பு வழக்குகளை சந்திக்கும் நிலை, இல்வாழ்வில் ஈடுபாடு குறைவு, கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு போன்றவை உண்டாகும்.
கேது தசா-சுக்கிர புத்தி பலன்கள்
கேது(Ketu Dasa) சுக்கிர புக்தியானது 1வருடம் 2 மாதம் நடைபெறும்.
சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் திருமண சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, குடும்பத்தில் ஒற்றுமை, லட்சுமி கடாட்சம், உத்தியோகத்தில் உயர்வு, அரசு வழியில் அனுகூலம், எதிர்பாராத செல்வ சேர்க்கை, பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும்.
சுக்கிரன் பலமிழந்திருந்தால் குடும்பத்தில் வறுமை, அரசு வழியில் கெடுபிடிகள், வண்டி வாகனத்தால் நஷ்டம், மனதில் கலக்கம், பெண்களால் பிரச்சனைகள், பணவிரயம், விஷத்தால் பயம், மேலிருந்து கீழே விழும் அபாயம், இடம் விட்டு இடம் சென்று சுற்றித்திரியும் நிலை, சர்க்கரை நோய் போன்றவை உண்டாகும்.
கேது தசா-சூரிய புத்தி பலன்கள்
கே கேது(Ketu Dasa) சூரிய புக்தியானது 4 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.
சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசு துறைகளில் அதிகார பதவிகளை வகிக்கும் யோகம், மனைவி, பிள்ளைகளால் சிறப்பு, புண்ணிய யாத்திரைகள் செல்லும் வாய்ப்பு, பூர்வீக சொத்துக்களால் அனுகூலம், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, தந்தை மற்றும் தந்தைவழி உறவுகளால் முன்னேற்றம் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.
சூரியன் பலமிழந்திருந்தால் தந்தை, தந்தை வழி உறவுகளால் பிரச்சனை, அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, தொழில் வியாபார நிலையில் வீண்விரயம், பதவியில் நெருக்கடி, உத்தியோக இழப்பு, உஷ்ணம் இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்பு, உறவினர்களிடையே பகை, தலை,காதுகளில் வலி, தேவையற்ற வீண் அலைச்சல் ஏற்படும்.
கேது தசா -சந்திர புத்தி பலன்கள்
கேது(Ketu Dasa) சந்திர புக்தி ஆனது 7 மாதங்கள் நடைபெறும்.
கேது தசை சந்திர புத்தி காலங்களில் சந்திரன் பலம் பெற்று இருந்தால் மன உறுதியும், எடுக்கும் காரியங்களில் வெற்றியும், தாராள தனவரவும், ஆடை, ஆபரண சேர்க்கையும், நல்ல உணவு வகைகளை சாப்பிடும் யோகமும், வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கக் கூடிய வாய்ப்பும், ஜல தொடர்புடையவற்றால் லாபமும், தாய் மற்றும் தாய்வழி உறவினர்களால் முன்னேற்றமும் உண்டாகும்.
சந்திரன் பலவீனமாக இருந்தால் மனைவி பிள்ளைகளுக்கு நோய், தண்ணீரால் கண்டம், வயிற்றுக்கோளாறு, நீர் தொடர்பான உடல் உபாதைகள், மனக்குழப்பங்கள், தாய்க்கு கண்டம், தாய் வழி உறவுகளுடன் பகை, வீடு, மனை வண்டி, வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகும்.
கேது தசா-செவ்வாய் புத்தி பலன்கள்
கேது(Ketu Dasa) செவ்வாய் புக்தி ஆனது 4 மாதம் 27 நாட்கள் நடைபெறும்.
செவ்வாய் பலமாக இருந்தால் வீடு, மனை, பூமியால் அனுகூலம், எடுக்கும் காரியங்களில் வெற்றி, திடீர் பதவி உயர்வு, எதிர்பாராத முன்னேற்றத்தை அடையும் வாய்ப்பு, பொருளாதார மேன்மை உண்டாகும்.
செவ்வாய் பலவீனமாக இருந்தால் எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் சூழ்நிலை, திருட்டு பயம், வயிற்றுப்போக்கு, மனைவி பிள்ளைகள் இடையே கருத்து வேறுபாடு ,ஜூரம், அம்மை கட்டி, புண் போன்ற உஷ்ண பாதிப்புகள், பகைவரால் தொல்லை, உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடையே பகை, வீண் பழி சுமக்கும் நிலையும் உண்டாகும்.
கேது தசா-ராகு புத்தி பலன்கள்
கேது தசாவில்-ராகு புத்தியானது 1வருடம் 18 நாட்கள் நடைபெறும்.
கேது தசையில் ராகு புக்தி நடைபெறும் காலங்களில் அவ்வளவாக அனுகூலமான பலன்களை அடைய முடியாது. பெண்களால் கலகம், விதவைப் பெண்களுடன் தொடர்பு, தரித்திரம், உறவினர்களின் தொல்லை, அரசாங்க வழியில் கெடுபிடிகள், அடிமைத்தொழில், குடும்பத்தில் மருத்துவச் செலவுகள், இடம் விட்டு இடம் மாறி சுற்றி திரியும் நிலை, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய சூழ்நிலை உண்டாகும்.
கேது தசா-குரு புத்தி பலன்கள்
கேது தசா வில் குரு புக்தியானது 11 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.
குரு பலமாக இருந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி, பூரிப்பு, தனதான்ய விருத்தி, உறவினர்களால் அனுகூலம், திருமண சுப காரியம் நடைபெறும் வாய்ப்பு, எதிர்பாராத தனவரவு, பெரிய மனிதர்களின் தொடர்பு, புத்திர வழியில் பூரிப்பு, செல்வம், செல்வாக்கு, உயர்வு உண்டாகும்.
குரு பலவீனமாக இருந்தால் அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, பயணங்களால் அலைச்சல், வயிறு பாதிப்பு, கணவன் மனைவியிடையே பிரச்சனை, சுபகாரியத் தடை, பிராமணர்களின் சாபத்தை பெறும் சூழ்நிலை, கெட்ட காரியத்தில் ஈடுபடும் நிலை, பொருளாதார சரிவு போன்றவை ஏற்படும்.
கேது தசா-சனி புத்தி பலன்கள்
கேது தசையில் சனி புக்தியானது 1வருடம் 1மாதம் 9 நாட்கள் நடைபெறும்.
சனி பலமாக இருந்தால் இரும்பு மற்றும் பழைய பொருட்கள் மூலம் லாபம் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வழியில் அனுகூலங்கள், உயர்பதவிகள் தேடிவரும். பொன், பொருள் வண்டி ,வாகனம் சேரும்.
சனி பலவீனமாக இருந்தால் கடுமையான சோதனைகள், உடல் நிலையில் பாதிப்பு, வீண் விரயம், தாய்-தந்தைக்கு தோஷம், எதிர்பாராத விபத்துகளால் உடல் உறுப்புகளை இழக்கும் நிலை, கடன் ஏற்படும் சூழ்நிலை போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
கேது தசா- புதன் புத்தி பலன்கள்
கேது தசாவில் புதன் புக்தியானது 11 மாதம் 27 நாட்கள் நடைபெறும்.
புதன் பலமாக இருந்தால் புத்திகூர்மை, ஆடை, ஆபரண சேர்க்கை, மாமன் மூலம் அனுகூலம், தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம், கல்வி, கணக்கு, கம்ப்யூட்டர் துறைகளில் ஆர்வம், அறிவை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். தான தர்மம் செய்யும் பண்பு, வண்டி, வாகனங்கள் சேரும் யோகம் அமையும்.
புதன் பலவீனமாக இருந்தால் நண்பர்கள் உற்றார் உறவினர்களிடையே பகை, வம்பு வழக்குகளில் சிக்கும் நிலை, மாமன் வழியில் விரோதம், கருச்சிதைவு, எடுக்கும் காரியங்களில் தடை, நரம்புத் தளர்ச்சி, தலைவலி, திடீர் மயக்கம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
கேதுவுக்குரிய பரிகாரங்கள்
- தினமும் விநாயகரை வழிபடுதல், கேதுவுக்குரிய மந்திரங்களை ஜபித்தல், சதுர்த்தி விரதம் இருத்தல், வைடூரிய கல்லை மோதிரத்தில் பதித்து உடலில் படும்படி அணிந்து கொள்ளுதல் போன்றவை கேதுவால் உண்டாகக்கூடிய தீய பலன்களை குறைக்க உதவும்.