பாளையங்கோட்டை ஆயிரத்து அம்மன்
பாளையங்கோட்டை ஆயிரத்து அம்மன் வரலாறு:
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பாளையங்கோட்டையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. ஆயிரத்து அம்மன் இவ்வாழ் மக்களின் இஷ்ட தெய்வமாக விளங்குகிறாள்.
ஆயிரத்து அம்மன் சிறப்பு:
திருமணம் கைகூடவும், நம் வாழ்க்கையில் இன்பம் நிலைக்கவும், ஆயிரத்து அம்மனை வேண்டி வந்தால். நாம் நினைத்த காரியம் எளிதில் கைகூடும். அம்மனுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் இங்கு நடைபெறும் தசரா என்ற விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
பரிகாரம்
அம்மனுக்கு உகந்த நாளான செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும், தை-ஆடி வெள்ளிக்கிழமைகளிலும், ஐந்து முக தீபம் ஏற்றி, குங்குமத்தால் அர்ச்சித்து வர ஆயிரத்து அம்மன் அருள் கிடைத்து, நம் ஆற்றல் பெருகி சகல சம்பத்தும் கிட்டும்.
வழித்தடம்
திருநெல்வேலி புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து பாளையங்கோட்டைக்கு அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன. பாளையங்கோட்டையில் மையப்பகுதியான பாளை மார்க்கெட் என்ற இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது.