Homeபராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026பாரபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026:கும்ப ராசி

பாரபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026:கும்ப ராசி

பாரபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026:கும்ப ராசி

தொழில்காரனாகிய சனியை ஆட்சி வீடாக கொண்ட கும்ப ராசி அன்பர்களே! இந்த வருடம் ஜூன் 1-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் இருந்து 6ம் இடத்திற்கு வருகிறார். பிறகு மீண்டும் அக்டோபர் 31-ஆம் தேதி 6ம் இடத்தில் இருந்து அதிசாரமாக வருகிறார். பிறகு வக்ரகதியில் ஜனவரி 24ம் தேதி முதல் மீண்டும் 6ம் இடத்திற்கு வருகிறார்.

வருடம் முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் 71/2 சனியின் கடைசி பாகத்தில் இருக்கிறார்.

டிசம்பர் 5-ஆம் தேதி முதல் ராகு பகவான் உங்கள் ராசியில் இருந்து 12-ஆம் இடத்திற்கும், கேது பகவான் ஏழாம் இடத்தில் இருந்து 6ம் இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

இதன் மூலம் கடன் வாங்கி வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. போட்டியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தாமதமாக கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு இருந்த ஆரோக்கிய குறைவுகள் சரியாகும்.

ஐப்பசி,கார்த்திகை மாதங்களில் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் முடிவாகும். பூர்வ புண்ணிய சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறையும். மாணவர்கள் ஓரளவு நல்ல மதிப்பெண் பெறுவார்கள். தெய்வ ஸ்தலங்களில் யாத்திரை செய்து நல்ல தரிசனம் பெறுவீர்கள். மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் தீரும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை.

பரிகாரம்

சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபமும், ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி வர உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் பனிபோல விலகும். மொத்தத்தில் இந்த வருடம் 70% நற்பலன்களை நல்கும் வருடமாக உங்களுக்கு அமையும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular