பித்ரு தோஷம் கண்டுபிடிக்கும் முறைகள், சிறந்த தலங்கள் மற்றும் சாப நிவர்த்தி மந்திரம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

பித்ரு தோஷம்

தோஷங்களில் மிகக் கொடுமையான தோஷம் பித்ரு தோஷம்(Pithru Dosham) ஆகும்

பித்ரு ஸ்தானம் என்பது ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவகம் ஆகும்.நம் முன்னோர்களைப் பற்றி அறிய உதவும் பாவம் 9ம் பாவகம் ஆகும். 9ம் பாவக அதிபதி பலம் குறைந்தாலும், அல்லது ராகு-கேதுக்கள்(Rahu-Ketu) ஒன்பதாம் பாவத்தில் சம்பந்தப்பட்டால் அல்லது இயற்கையான பாவிகள் 9 ஆம் பாவத்தை பார்த்தாலும் பித்ரு தோஷம்(Pithru Dosham)ஏற்படுகின்றது.

 பித்ரு தோஷம் ஏற்பட காரணம் என்ன??

நமது தாய் மற்றும் தந்தை வழியில் வாழ்ந்து மறைந்துபோன முன்னோர்கள் நமது பித்ருக்கள் ஆவர்கள்.வீட்டில் இறந்தவர்களின் சடலங்களை வைத்துக்கொண்டு சண்டையிடுதல், பித்ருக்களுக்கு சிராத்தம் காரியங்கள் சரிவர செய்யாமல் பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடையாமல் இருப்பதினால் ஏற்படும் தோஷம் பித்ரு தோஷம்(pithru Dosham)ஆகும்.

ஒருவர் முற்பிறவியில் தாய் தந்தையை கவனிக்காமல் இருந்தால் அதற்காக பெற்றோர்கள் சாபமிடுவது மறுபிறவியில் அவர்களுக்கு  பித்ரு(pithru dosham) தோஷம்  ஏற்பட காரணமாக அமையும்.

பித்ரு தோஷம்

பித்ரு தோஷம் என்ன செய்யும் 

  • பித்ரு தோஷ(pithru thosam)ஜாதகம் அமைப்பு கொண்ட ஜாதகருக்கு திருமணம் மிகத் தாமதமாக நடக்கும் அல்லது திருமணம் நடக்காமல் இருக்கும்.
  • அப்படி திருமணம் நடந்தாலும் விவாகரத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது
  • கணவன் மனைவியிடையே அன்யோன்யம் இருக்காது ,வெறுப்பு அதிகரிக்கும், குடும்ப வாழ்க்கை நிம்மதியற்று போகும்.
  • ஒரு சிலருக்கு பலமுறை திருமணம், கலப்பு திருமணமும் நடைபெறும்.
  • ஒரு சிலர் பெற்றோர்களுக்குத் தெரியாமல் ரகசிய காதல் திருமணம் செய்து கொள்வார்.
  • பித்ருக்கள் நமக்கு கொடுக்கும் சாபம் கடவுளிடம் நமக்கு கிடைக்கும் வரங்கள் அனைத்தையும் பித்ரு தேவதைகள் நம்மை அனுபவிக்க விடாது.
“பித்ருதோஷம்”(pithru dosham)உள்ளவர்கள் பரிகாரம் செய்யாமல் இருந்தால் அவர்கள் தொடர்ந்து கஷ்டங்களை அனுபவித்து வருவார்கள். எத்தனை கோவிலுக்கு சென்று வந்தாலும் பித்ரு பரிகாரம் செய்யாமல் பித்ரு தோஷம் நிவர்த்தி ஆகாது.
ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ,மகாளயபட்சம் நாள்களிலும் பிரதி மாதம் அமாவாசைகளிலும் பிதுர்களுக்கு  செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.
  • மிகக் கடுமையான பிதுர் தோஷம்(pithru thosam)உடையவர்கள் ராமேஸ்வரம் சென்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தர்ப்பணம் செய்வது அவசியம்.
  • அவிட்டம், சதயம் ,பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதுர் பூஜையானது பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணியத்தைத் தரும்.
  • அவிட்டம் நட்சத்திரத்தில் வரும் காலங்களில் பித்ருக்களை நினைத்து அன்னதானம் செய்தால் பித்ரு தோஷம்(pithru thosam)நீங்கும்.
பித்ரு தோஷம்

  பித்ரு தோஷம்சாபம் நீங்க மந்திரம்

காலையில் எழுந்து பிதுர் காரணமான சூரியனை நோக்கி குளித்து தூய்மையான வஸ்திரத்துடன் நின்று இந்த மந்திரம் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும் .

சூரிய பகவானை மனதில் நிலைநிறுத்திக் கூறி வந்தால் பித்ருக்களினால்  ஏற்படும் தடை நீங்கி வாழ்வில் நன்மை ஏற்படும்

ஹரி ஓம் ஹ்ராம் ஹரிம்! சஹசிவ சூரியாய!
வா வா  ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா!

“பித்ரு தோஷம்”(pithru thosam)உடையவர்கள் இதனை ஞாயிற்றுக்கிழமையில் வரும் அமாவாசையன்று தொடங்க வேண்டும்.பின் முடிந்தவரை  செய்துவர பாவங்கள் அனைத்தும் நீங்கும். தடைகள் அகன்று சுபகாரியங்கள் நடக்கும்.


பித்ரு பூஜை செய்ய சிறந்த தலம்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான சிவபெருமான் ‘நாவாய் முகுந்தன்’ என்று பெயர் கொண்டு அருள் பாலிக்கும் இத்தலம் பித்ரு பூஜை செய்ய சிறந்த தலமாக கருதப்படுகிறது .

கேரளாவில் திரு நாவாய் என்ற ஊரில் அமைந்துள்ளது .இத்தல விருட்சத்தின் அடியில் பித்ருக்களுக்கு அமாவாசையன்று அன்னம் வைத்து வழிபடுகின்றனர். இங்கு பித்ரு பூஜை செய்தால் நல்ல பலன் அடையலாம்.

பித்ரு வழிபாட்டின் போது கவனிக்க வேண்டியவை

  • இறந்த நேரம் மற்றும் திதிகளை குறித்து வைத்து அடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டும் பித்ரு தர்ப்பணம் செய்வது நல்லது பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது காலை 7 மணிக்குள் செய்துவிடவேண்டும்.
  • அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தின் போது தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது தர்ப்பணங்களை முறைப்படி சரியான நேரத்தில் செய்தால் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் நீங்கும்.
  • பித்ருக்களுக்கு தர்ப்பணம் நதிகளின் கரைகளில் கொடுத்தால் அதற்கு அதிக சக்தி உண்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது  பல யாகங்களை  செய்வதை விட மேலானதாகும்.
  • ஒருவர் ஆண்டுக்கு  96 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும் அமாவாசை மற்றும் சூரிய சந்திர கிரகணங்கள் பித்ருகளுக்கு செய்யும் தர்ப்பணம் களுக்கு மிகுந்த பலன் உண்டு.
  • அமாவாசையன்று அன்னதானம் செய்வது மிகவும் நல்லது பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாட்களில் வெங்காயம், பூண்டு மற்றும் வாசனை திரவியங்களை தவிர்க்க வேண்டும்.
  • ஒரு வருடம் நாம் பித்ருக்களுக்கு பூஜை செய்யத் தவறிவிட்டால் பித்ருக்களுக்கு மனவருத்தம் ஏற்படும் என்று கூறப்படுகிறது
  • ஆடி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணம் மிகவும் சக்தி உண்டு .
  • இந்த நாளில் பித்ருக்களை சாந்தப்படுத்தினால் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழலாம்.
  • இந்த நாளில் தர்ப்பணம் கொடுக்க முன்னோர்களின் ஆசி முழுவதும் நமக்கு கிடைக்கும் திருவாதிரை, புனர் பூசம், நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று தர்ப்பணம் செய்தால் 12 வருடங்கள் பித்ருக்களை திருப்தி படுத்த முடியும்.

Leave a Comment

error: Content is protected !!