ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 -மேஷம்
ஐப்பசி 13, அக்டோபர் 30 ன் திங்கட் கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப் படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றது.
காலப்புருஷனின் ராசியான நீங்கள் தலைமையாக முதல் ஆளாக இருக்க வேண்டும் என்றே செயல்படக் கூடியவர்கள். உங்கள் சொந்த லக்னாதிபதி யாராக இருந்தாலும் அதன் உற்பத்தி எண்ணங்களை முதல் அதிகாரம், தலைமை, வேகம், துணிச்சல் என்று வெளிப்படுத்துவீர்கள்.
உங்கள் ராசியில் இதுவரை ‘ராகு’ இருந்து பெரிய பெரிய முயற்சிகள், இலக்குகளை அடைய உள்ளுக்குள் தூண்டிக் கொண்டேயிருந்தார். ஆனால் உங்களின் 7 ஆம் இட துலாமில் கேது இருந்ததால் சமூகம்,நட்பு, மற்றும் வாழ்க்கைத் துணை வழிகளில் தடையே இருந்து வந்தது.
இப்பெயர்ச்சியில் இவையெல்லாம் மாறும். வெளி இடங்களில் பெரிய இலாபம் உங்களுக்குக் காத்துள்ளது. இதனால் முக்கியமாக அவரின் வெளிநாடு, அன்னிய மற்றும் உள்ளூர் மாற்று மத வழிகளில் இவைகள் கிடைக்கும். ராகு கேதுவின் காரகங்களான மறைமுக விஷயங்கள்,ஏற்றுமதி இறக்குமதி,பெரிய கனரக வாகனங்கள்,ஆன்மீகம்,மாற்று மருத்துவம், ரசாயனம்,கெமிக்கல்ஸ்,தையல் துறை,பெரிய பெரிய திட்டங்கள்,கனவுகள் எல்லாம் நிறைவேறும்.
விலக்க வேண்டிய மனிதர்களும் இடங்களும் உங்களை விட்டு விலகுவர்,விலக்கி வைக்கும். நடக்க வேண்டியவைகளை மட்டுமே இனி தேர்ந்தெடுத்துச் செய்வீர்கள்..ஏனெனில் வெற்றியே நடக்க வேண்டுமல்லவா?
உங்கள் மனதில் குடியிருந்த மாய நினைவுகள் அகன்று அது சுத்தமாகும். உங்களை எல்லோரும் இனி புரிந்து கொள்வார்கள்.ராசியிலிருக்கும் உங்களின் பாக்கியாதிபதி குரு,உங்களின் பாக்கியங்களைத் தந்து, தந்தை வழிச் சிக்கல் நீக்கி, அரசு வழிகளில் ஆதாயமும் கொடுக்கப் போகிறார். கடன்கள் அகலும், பகை வலி வேதனை ஓட்டும். வேலைக்குச் செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இது கேதுவின் விரக்தி ஞானத்தை அவர் கொடுத்து வேலை Job மாறச் செய்வார் என்பதால்தான். ஆனால் சுய தொழிலில் Business பெரும் வெற்றி வரும். உறக்கம் போக விஷயங்களில் எல்லாம் கட்டுப்பாட்டுடன் இருங்கள். உடல் நலம் சிறிது குன்றும். மங்கிய குல தெய்வ அருள் இனி கிடைக்கும். தடையிலிருந்த உறவுகள் குழந்தை பாக்கியம் அதிர்ஷ்டமெல்லாம் இனி கிடைக்கும்.
தாய்மாமன் வழிகளில் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். தொலை தூர இடப் பயணங்கள் ஏற்படும். திருமணத்தடை விலகும். உங்களுக்கு நடக்கும் சுய தசா புத்தி அந்தரங்களின் வழியில் அன்னிய வாழ்க்கைத் துணையை இது அமைக்கும். 6 ஆம் இடக் கேதுவால் உங்கள் அறிவில் ஆன்மீகம் குடிகொள்ளும். சனியின் 8 ஆம் இடப் பார்வையால் உங்கள் சுய ஜாதகத்திற்குட்பட்ட அவமானங்கள், பெரிய துயரங்கள், ஆயுளுக்கே அச்சுறுத்தல்கள் என்று பொதுவில் இருக்கும்.
எளிமையாக சொல்ல, ராகு கேதுக்கள் ராசிக்கு மறைவதே அவர்களின் தடையை விலக்குகிறார்கள், 6,12 ல் உள்ள பலன்களை முடிந்தளவு சாககமாக்குகிறார்கள் என்பதுதான்.முன்னோர்களின் தீயக் கர்மா இனி ஒன்றரை வருடத்திற்கு உங்களுக்குச் செயல்படாமல் தான் இருக்கும்.சுய ஜாதகத்தில் இந்த ராகு கேது எங்கிருக்கிறார்களோ அவைகளின் செயல்பாட்டையும் இப்பெயர்ச்சி குறைக்கும்.
பலன் தரும் பரிகாரம்
பாம்புகள் அதிகம் நடமாடும் இடங்களில் 9 முட்டைகளை உங்கள் ஜென்ம நட்சத்திர நாளன்று, சிறு செயற்கை கவரில் முடித்து தலையை இடம், வலம் என்று ஒன்பது சுற்றுகளாகச் சுற்றிய பின், அந்த முட்டையிருக்கும் கவரைப் பிரித்து அந்த இடத்தில் முன்னோர்களை நினைத்து வைத்து விடுங்கள். பின்பு நேராக திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்குச் சென்று குளித்து விட்டு உங்கள் பணிகளைச் செய்யுங்கள்.கம்பளி ஆடை ஒன்றையும் தானமாக ஒரு தடவை வழங்கலாம்.