சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-துலாம்
ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது.
சுக்ர பகவானின் அருள் பெற்ற துலாம் ராசி அன்பர்களே !!! சித்திரை 8-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சாரம் செய்கிறார்.
சனிபகவான் இந்த வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
ஐப்பசி 13-ம் தேதி வரை ராகு மற்றும் கேதுக்கள் முறையை 7-மற்றும் 1-ம் இடங்களிலும், பிறகு 6 மற்றும் 12-ம் இடங்களிலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
இதன் மூலம் இந்த வருடம் திருமணமாகாதவர்களுக்கு கண்டிப்பாக திருமணம் நடந்தேறும் உடனடியாக குழந்தை பாக்கியமும் கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். படித்த இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும். பூர்வ புண்ணிய சொத்துக்கள் தடையின்றி கிடைக்கும். தொழில் நன்றாக விருத்தியடையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். வீடு, மனை, புது வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. வெளிநாட்டு வேலை விரும்புவர்களுக்கு ஐப்பசி 13-ம் தேதிக்கு பிறகு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெறுவார்கள்.
எந்த வேலையை ஆரம்பித்தாலும் அதை திறம்பட செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் நல்ல முன்னேற்றத்தை அடைவார். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேற்றுமைகள் விலகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த வருடம் முழுவதும் ஒரு யோகமான ஆண்டாக இருக்கும்.
பலன் தரும் பரிகாரம்
வெள்ளிக்கிழமை விநாயகருக்கும், செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கும் நெய்விளக்கு வைத்து வர சகல துறைகளிலும் தடைகள் விலகி மேலும் நல்ல பலன்களை பெறுவீர்கள்.