Homeஅற்புத ஆலயங்கள்ராகு கேது பரிகார தலம் - திருப்பாம்புரம்: முக்கிய தகவல்கள் மற்றும் சிறப்பு

ராகு கேது பரிகார தலம் – திருப்பாம்புரம்: முக்கிய தகவல்கள் மற்றும் சிறப்பு

திருப்பாம்புரம்

தலம் : திருப்பாம்புரம்

தெய்வம்: ஸ்ரீ பிரமராம்பிகை உடனாய ஸ்ரீ பாம்புரேஸ்வரர் திருக்கோயில்

வழிபட வேண்டிய முறை

இங்கு எழுந்தருளியிருக்கும் சுவாமி , அம்பாள் மற்றும் ஏக சரீர இராகு , கேது பகவானுக்கு ராகு காலத்தில் அபிஷேகம் செய்விக்க வேண்டும். இராகு , கேதுவுக்கு நீலம் மற்றும் பல வண்ண ஆடையைச் சார்த்த வேண்டும். சங்கு புஷ்பம் , மல்லிகை , நீலமந்தாரை . இலுப்பைப்பூ , செவ்வரளி , நாகலிங்கப்பூ ஆகியவை இராகு கேது பகவானுக்கு பிடித்தவை.

அர்ச்சனை முடிந்தபின் உளுத்தம் பருப்பு பொடி மற்றும் கொள்ளுப் பொடி அன்னம் நிவேதனம் செய்து தானம் செய்ய வேண்டும்.

கருவறையில் நெய் தீபம் நிறைய ஏற்றச் செய்யுங்கள்.

rahu ketu

முக்கிய குறிப்பு:

தேவாரத் திருத்தலங்களுள் 176 – ஆவது தலம். சோழ நாட்டுக் காவிரி தென்கரைத் தலம். சம்பந்தர் பாடல் பெற்றது.தெரிந்தோ தெரியாமலோ பாம்பை அடித்திருந்தால் இங்கு வந்து வழிபட்டு நிவாரணம் பெறலாம்.

வழித்தடம்:

கும்பகோணத்திலிருந்து காரைக்கால் சாலையில் கொல்லுமாங்குடிக்கு முன்னதாகவே கற்கத்திஎன்னும் ஊரிலிருந்து 3 கி.மீ.ல் உள்ளது.

நடை திறக்கும் நேரம்

காலை : 07.00 -12.30 மாலை : 04.00 – 08.00

தொலைபேசி எண்கள் : 0435-2469555 , 94430 – 47302

கோவில் அமைந்துள்ளது இடம்

ஸ்ரீ பாம்புரநாதர் கோயில் ,திருப்பாம்புரம் , சுரைக்காயூர் அஞ்சல் – 612 203 பாலையூர் வழி , குடவாசல் வட்டம் , திருவாரூர் மாவட்டம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!