Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-2025ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 - கடகம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 – கடகம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025- கடகம்

ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார்.

சந்திரனின் அருள் பெற்ற கடக ராசி அன்பர்களே!!! இதுவரைக்கும் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்த “ராகு பகவான்” தற்பொழுது நடைபெறும் பெயர்ச்சியில் 9-ம் இடத்திற்கு மாறி வருகிறார். அதே சமயத்தில் “கேது பகவான்” உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்து 3-ம் இடத்துக்கு மாறி வருகிறார். இந்த அமைப்பு சீரான நன்மைகளை தருவதாக இருக்கும். அதே சமயம் சின்சியரான செயல்களும், சலிக்காத உழைப்பும் உங்களை உயர்த்தும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2024

வேலை -அலுவலகம்

வேலை பார்க்கும் இடத்தில் சுணங்கி இருந்த சூழல் மறையும். திறமைகள் மதிக்கப்பட்டு ஏற்றமும், மாற்றமும் ஏற்படும். புதிய வாய்ப்பு தேடியவர்களுக்கு மனம் போல் பணிவாய்ப்பு கைகூடும். எந்த சமயத்திலும் அலட்சியமும், அவசரமும் மட்டும் கூடவே கூடாது. உடன் இருப்பவர்கள் தவறுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்க நேரிடலாம். கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள்.

குடும்பம் -உறவுகள்

வாக்கில் இனிமை இருந்தால் வாழ்க்கையில் இனிமை இடம் பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பணவரவு சீராகும் போது பழைய கடன்களை பைசல் செய்து விடுங்கள். வாரிசுகளால் பெருமை சேரும். குடும்ப உறவுகள் இடையே வீண் குதர்க்கமும் கூடாது. சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து தொழில், பணி, வர்த்தகம், படிப்புக்காக செல்ல நேரிடலாம். அதை தவிர்க்காமல் ஏற்றுக் கொள்வது நல்லது.

தொழில்

எந்த தொழில் செய்தாலும் ஏற்றமும், வளர்ச்சியும் ஏற்படும். புதிய முதலீடுகளில் நேரடி கவனம் இருக்கட்டும். வெளிநாட்டு வர்த்தகத்தில் உரிய நடைமுறைகளை முழுமையாக கடைப்பிடியுங்கள். வங்கி கடன் சுலபமாக பைசலாகும். சிலருக்கு புதிய கூட்டமைப்புகள் மூலமாக தொழில் வளர்ச்சி ஏற்படும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025

அரசு -அரசியல் சினிமா

அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். எதிரி பலம் ஒடுங்கும். சின்ன சின்ன திட்டங்களாக இருந்தாலும் சின்சியராக கவனித்து செய்வது நல்லது. யாருடைய கட்டாயத்துக்காகவும் பிறருக்கு ஜவாப் ,ஜாமீன் தர வேண்டாம்.

கலை மற்றும் படைப்பு துறையினருக்கும் இலக்கியத்துறை சார்ந்தவர்களுக்கும் படைப்புகளுக்கு அரசு வழியில் பாராட்டு விருதுகளுக்கு வாய்ப்பு உண்டு. புது வாய்ப்புகள் வீடு தேடி வரும்போது வீணான ஜம்பத்துல விலகிக் கொள்வது கூடாது.

உடல்நிலை -அறிவுரை

அவசியம் இல்லாத இரவு நேர பயணத்தை தவிர்த்து விடுங்கள். இரவு பயணத்தில் இடைவழியில் இறங்குவதை தவிருங்கள்.அஜீரணம், தூக்கமின்மை உபாதைகள் வரலாம். முடிந்தவரை வறுத்து பொறித்த உணவுகளை தவிர்த்து விடுங்கள். தேவையில்லாத மனக்குழப்பம் தவிர்க்க தியானம், யோகா பழகுங்கள். உணவு, தூக்கத்தை முறைப்படுத்திக் கொள்ளுங்கள்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025

செய்ய வேண்டிய பரிகாரம்

ஒருமுறை “திருநாகேஸ்வரம்” சென்று சுவாமி, அம்பாளை வணங்கி விட்டு, அரவு கிரகங்களை ஆராதித்து விட்டு வாருங்கள். வாழ்க்கையில் நிம்மதி நிறையும்!!.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!