ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 – கடகம்
ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார்.
இராகு பகவான் உங்கள் ராசிக்கு 8-மிடமும் மாரக ஸ்தானமுமான மீனத்திற்கு வருகிறார். கேது பகவான் உங்களுக்கு வாக்கு வரவு குடும்பம் என்ற 2 ஆம் ஸ்தானமான கன்னி ராசிக்குள் வருகின்றது. இந்த ‘ராகு கேது‘ பாதிக்கும் வகையில் இருக்கும் சுய ஜாதக ஜாதகத்தினர்களுக்கு இது பாதிப்பைக் கொஞ்சம் அதிகம் ஏற்படுத்த உள்ளது. “கண்டகச் சனி” நடப்பில் உள்ளது. “அஷ்டமச்சனி” காத்துள்ளது.
8 ஆம் ஸ்தான மீன ராகுவால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்களும், திடீர் இழப்புகளும் உங்கள் ஜாதகத்தின் படி கலந்து நடக்கும். வெளிநாட்டு வேலை, தொழில், வெளி மற்றும் வேறு மத மனிதர்களின் உதவி அறிமுகமெல்லாம் கிடைக்கும்.
ஆயுள் பற்றிய அச்சம் நிலவும்.பங்குச் சந்தை மறைமுக வழிகளில் எல்லாம் வரவுகள் அதிகம் கிடைக்கும்.ஆபத்துகளும் சூளும். வேலை தொழில் வாக்கு மற்றும் செயல்களில் எல்லாம் மிகுந்த கண்ணியம் உங்களுக்குத் தேவை.
இரண்டில் வரும் கேதுவால் குடும்பத்தில் பிரிவுகள் ஏற்படும்.இதிலிருந்து ஒதுங்கி அல்லது ஒதுக்கி தனியாளாகும் சூழல் நிலவும். திருமணமெல்லாம் இனி ஒன்றரை வருடத்திற்கு நினைத்தே பார்க்க வேண்டாம். குழந்தை பாக்கியமும் அரிது. நட்பிலும் பங்குதாரர்களிடத்தும் சமரசமாகவே இருக்க வேண்டும்.
உணவு விஷயங்களில் கட்டுப்பாடுகள் தேவை.நீங்கள் விரும்பிய உணவே உங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் அதை ஒதுக்கி விடுங்கள். இல்லையெனில் சித்தா மூலிகை மருந்துகளை சாப்பிடும் சூழ்நிலை வரும்.
கொடுக்கல் வாங்கலிலும் தடையே. பற்றில்லாத அதாவது தனக்கென இல்லாத சுய விருப்பு வெறுப்பைக் கடந்த உண்மை அறிவை வரவாகப் பெற (ஞானம்) இருக்கிறீர்கள்.
பலன் தரும் பரிகாரம்
ஒரு முறை கதிரமங்கலம் சென்று வனதுர்க்கை அம்மனை தரிசித்துவிட்டு வாருங்கள்.இன்னல்கள் யாவும் விலகி நல்லது நடக்கும்.