Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள் 2025சனி பெயர்ச்சி பலன்கள் 2025:கும்பராசி (பாத சனி)

சனி பெயர்ச்சி பலன்கள் 2025:கும்பராசி (பாத சனி)

சனி பெயர்ச்சி பலன்கள் 2025 -கும்ப ராசி

(அவிட்டம் 3,4ம் பாதம் ,சதயம் ,பூரட்டாதி 1,2,3ம் பாதம் )

சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025

இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனி பெயர்ச்சி பலன்கள் 2025

மகர ராசி

இதன் அதிபதி: சனி

உருவம்:குடம்

வகை:ஸ்திர ராசி

நிறம்:சாம்பல் நிறம்

கடவுள்:பரமேஸ்வரன்

சனியும் கும்ப ராசியும்

கும்ப ராசிக்கு சனி பகவான் ராசியாதிபதி மற்றும் 12-ஆம் அதிபதி ஆவார். இவ்வளவு நாளும் ராசியிலேயே அமர்ந்திருந்தவர், இப்போதைய பெயர்ச்சியில், 2-ஆமிடம் மாறி வந்து அமர்ந்துள்ளார்.

சனி இருக்கும் இடத்தின் பலன்கள்

சனிபகவான் கும்ப ராசியின் 2-ஆமிடத்தில் உள்ளார். 2-ஆமிடம் என்பது வாக்கு, குடும்ப ஸ்தானம். ஒருவரின் வருமானம் பற்றியும், அசையும் சொத்துகள் கண்கள் பற்றியும் கூறும் இந்த இடம் ஒருவரின் உணவு விஷயங்களை எடுத்துரைக்கும்.

2025 மார்ச் 29 முதல் ஏப்ரல் 27 வரை

பூரட்டாதி நட்சத்திரம் செல்வார். இந்த மாதம் உங்களுக்கு, எவ்வளவு பணவரவு வந்தாலும் அனைத்தும் செலவழிந்து விடும். அரசியல்வாதிகள் தாங்கள் கொடுத்த வாக்குதிகளை நிறைவேற்ற, அதிகப்படியான செலவு செய்யவேண்டி இருக்கும். உங்கள் மூத்த சகோதரனிடம், நீங்கள் வாக்கு கொடுத்துவிட்டு, பின்பு அதற்காக நிறைய இழக்க வேண்டி வரும். உங்கள் பகுதி தலைவராக இருப்பவர்கள், ப்ளாட் அஸோசியேசன் தலைவர்கள், தங்கள் கைச்சாசை செலவழிக்க நேரிடும்.

குடும்பத்தில் நீண்ட பயணம் போகும்போது, நீங்கள் மட்டுமே செலவழிக்க வேண்டி இருக்கும். லாபம் வரும்போது, கூடவே இரண்டு நஷ்டத்தையும் கூட்டிக்கொண்டு வரும். அன்னதானம் செய்ய முடிவெடுத்த பட்ஜெட் எகிறி அடிக்கும். பதவி உயர்வு வாங்கித் தருகிறேன் என பல மடங்கு செலவு வைத்துவிடுவர். வழக்கை முடித்துவிடலாம் என ஆசைகாட்டி, கணக்கு வழக்கில்லாத செலவை இழுத்துவிட்டுவிடுவர். சனி விரயாதிபதியாகி, தன ஸ்தானத்தில் அமரும்போது, நிறைய விரயமே தரமுடியும்.

2025 ஏப்ரல் 27 முதல் 2026 மே 17 வரை

இந்த காலகட்டத்தில், சனிபகவான் உத்திரட்டாதி எனும் நட்சத்திரத்திற்கு மாறி அமர்வார். இப்போது, தினுசு தினுசான உணவு வகைகளை, நிறைய தூரம் அலைந்து அலைந்து,தேடி தேடி ருசிபார்த்து சாப்பிடுவீர்கள். புதிய அரசியல்வாதியை பார்க்க, நெடுந்தூரம் பயணம் செய்து வந்து தூர நின்று பார்த்து மகிழ்வீர்கள். பக்கத்திலுள்ள கோவிலில், அன்னதானம் செய்யாமல், ரொம்ப தூரம் உள்ள கோவிலுக்கு வெகு தூரம் பயணமாகி, அங்குபோய் அன்னதானம் செய்வீர்கள்.

குடும்பத்தை வெளி நாட்டிற்கு அழைத்துச் செல்வீர்கள். தங்க நகையை நம் நாட்டில் வாங்கினால் நல்லவா இருக்கும் என ரொம்ப யோசித்து, வெளிநாடு சென்று, தங்கநகை வாங்குவீர்கள். அசையும் சொத்தான கார் வாங்கவும்,பசுமாடு கன்று வாங்கவும், வெகுதூரம் பயணமாகி, வெளியூரில் சென்று வாங்குவீர்கள். அரசியல்வாதிகள், தங்கள் பண முதலீடு பொருட்டு, கண்டிப்பாக வெளிநாடு செல்வர் ஆக கும்ப ராசியார், வீம்புக்காக மானாவாரியாக செலவும், பயணமும் செய்வர்.

2026 மே 17 முதல் 2027 ஜூன் 3 வரை

இப்போதில், சனிபகவான், கும்ப ராசியின் 2-ஆமிடத்தில், ரேவதி நட்சத்திரம் எடுத்துக்கொள்வார் இப்போதும் செலவும். பயணமும் உண்டுதான் ஆனால் அதன் வழிமுறைகள் வேறாக அமையும் காலில் நரம்பு பிடித்து இழுக்கிறது என்றோ, கால் நடக்கவே முடியவில்லை என்றோ. உங்கள் ஊரைவிட்டு, வெகுதூரம் தள்ளி இருக்கும் வைத்தியரை தேடிச் செல்வீர்கள்.

உங்களில் சிலர் ஒரு குற்றம் விஷயமாக தலைமறைவு கொள்வீர்கள், சில அரசியல் மந்திரிகள், கிரிமினல் வழக்கின் பொருட்டு இடம் மாறுவார்கள் சிலர் மானாவாரியாக காதல் பண்ணிவிட்டு, சட்டத்துறை. போலீசிடம் இருந்து தப்பிப்பதற்கு, வேறு ஊருக்கு சென்றுவிடுவர்.

லாட்டரிச் சீட்டு விற்பவர்கள் வேறிடம் செல்ல வேண்டியிருக் கும். சில சாமியாடுபவர்கள், நடக்க போவதை இதோ இப்போதே சொல்கிறேன் என்று கூறுபவர்கள், தலையில் முக்காடுபோட்டுக்கொண்டு, அடித்து பிடித்து ஓட வேண்டியிருக்கும் ரேவதி நட்சத்திரம் எடுக்கும் சனி, கும்ப ராசியாரை அலறி அடித்து ஓடச் செய்வார்.

சனி பார்வை பலன்கள்

சனிக்கு 3, 7, 10 எனும் பார்வைகள் உண்டு

சனி பெயர்ச்சி பலன்கள் 2025

சனியின் 3-ஆம் பார்வை பலன்

கும்ப ராசியின் 2-ஆமிடத்தில் அமர்ந்த சனிபகவான், 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். 4-ஆமிடம் என்பது சுகஸ்தானம். சனி பார்த்த இடத்தை பாழாக்குவார். எனவே இந்த சனிப்பெயர்ச்சி ஆரம்பித்தவுடன், உங்கள் உடல்நிலையில் சற்று கோளாறு ஏற்படும். இதனால் மருத்துவரிடம் அலைய நேரிடும். உங்கள் தாயார் நலனில் அக்கறை தேவை. வாகனங்கள் அங்கேங்கே இடித்து நெளிசலாகிவிடும். பசுமாடு அது பாட்டுக்கு எங்கோ போய்விடும். வயலில் விளைச்சல் திருடு போகும் வாய்ப்பு உண்டு.

உங்கள் வாழ்க்கைத்துணையின் தொழிலில் சற்று தேக்கம் ஏற்படும். உங்களுக்கு வரும் அதிர்ஷ்டம் வேறு ஒருவரால் தட்டி பறிக்கப்படும். உங்கள் தொழில் ஒப்பந்தத்தில் குற்றம் கண்டுபிடிக்கப்படும். தொழில் செய்யும் இடத்தை ஏனோ கொடுக்க நேரிடும். அல்லது வேறு இருட்டான சந்து போன்ற இடத்துக்கு மாற்ற நேரிடும். இப்போது வீடு பார்த்தால் அது டோக்கான இடத்தில்தான் கிடைக்கும். கல்வியில் ஞாபக மறதி உண்டாகும். இவ்விதம் சனி, தான் பார்த்த 4-ஆமிட பலன்களை சுருக்கு கிறார்.

சனியின் 7-ஆம் பார்வை பலன்

சனி பகவான் தனது ஏழாம் பார்வையால், கும்ப ராசியின் 8-ஆமிடத்தைப் பார்க்கிறார். சனிபார்வை கெடுக்கும். அழிக்கும் வல்லமை கொண்டது. எனவே 8-ஆமிட அசுப் பலனை அழிக்கிறார் இதுவரை மோசமான பங்குதாரரிடம் மாட்டிக்கொண்டிருந்தால் அவரிடம் இருந்து விடுபடுவீர்கள். ரொம்ப மோசமான காதல் அல்லது கல்யாணத்தில்மாட்டிக்கொண்டவர்களுக்கு, விடுதலை கிடைக்கும். சில எதிர்ப்புணர்வு மிக்க பணியாளர்கள், அவர்களாகவே விலகி விடுவர்.

சிலரின் அடாவடி மாமனார் தொல்லை நீங்கும் தொழில் செய்யும் இடத்திலுள்ள, மிரட்டல் நீங்கும் அரசு அதிகாரிகள் வியாபார விஷயமாக கொடுத்த இன்னல் முடிவுக்கு வரும் வாடகை வீட்டு பிரச்சினை தீரும் சில திருட்டு தடுக்கப்படும். சிலரின் இளைய சகோதரன் கொடுத்துவந்த சிக்கல் சீராகும் கைபேசி தொல்லை நீங்கும். சில குத்தகை ஒப்பந்த விஷய இம்சை நின்று விடும். காவல் துறையினரால் ஏற்பட்ட கஷ்டம் நீங்கும். உங்கள் வயல், தோட்டம். தண்ணீர் தாவா முடிவுக்கு வரும் 8-ஆமிடத் தைப் பார்க்கும் சனி, அதன் இம்சைகளை ஒழிக்கிறார்.

சனியின் 10-ஆம் பார்வை பலன்

சனி தனது பத்தாம் பார்வையால், கும்ப ராசியின் 11-ஆமிடத்தைப் பார்க்கிறார். 11-ஆமிடம் என்பது. உங்கள் எண்ணங்களை, ஆசைகளை, லட்சியங்களை, நோக்கங்களை நிறைவேற்றக்கூடிய இடம் சனி பார்வை படும்போது, உங்கள் ஆசைகள் நிறை வேறுவது மிக சிரமமாகும். மேலும் உங்கள் மூத்த சகோதரனை மனக்கசப்பு செய்ய தூண்டும் அரசியல்வாதிகளையும், அரசியலையும் பிரித்துவிட்டுத்தான் சனி பசுவான் மறுவேலை பார்ப்பார்.

சமையல் கெட்டுப்போக வாய்ப்புண்டு. சில வழக்குகள் இழுத்து அடிக்கும். தூர தேச யணங்களில் வெகு அலுப்பு ஏற்படும். பதவி உயர்வு வரும் ஆனா வராது என்ற நிலையில்தான் இருக்கும். நீங்கள் கிளப். சொஸைட்டியில் உறுப்பினராக இருப்பின்

அதனை விட்டு விலகும் சூழ்நிலை ஏற்படும். நிறைய மனிதர்களுடன் நெருங்கி பழகும் சூழ்நிலை உடையவர்கள். அதிலிருந்து பிரியும் நிலை உண்டாகும். 11-ஆமிடத்தைப் பார்க்கும் சனி பசுவான் லாபத்தை குறைப்பார்.

அனுமன் ஜெயந்தி

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

இதுவரை கும்ப ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த சனி கும்ப ராசியை விட்டு நீங்கி மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் அதன் தொடக்க நிலையில் கும்ப ராசி அவிட்டம் நட்சத்திர நண்பர்களுக்கு பெரிய அளவில் முன்னேற்றத்தை தரும் என்று சொல்ல இயலாது.

இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் சற்றே தொடரும் என்று தான் சொல்ல வேண்டும் .ஆனால் ஒன்று முன்பு இருந்தது போல பலமாகவோ ஆழமாகவும் தடங்கல்கள் இருக்காது என்று சொல்லலாம்

கஷ்டங்கள் கொஞ்சம் குறையும் ஆனால் சில அசம்பாவிதங்கள் வாழ்க்கையில் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது

நண்பர்கள் விரோதிகளாக மாறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம் அல்லது நண்பர்களிடம் இதுவரை கிடைத்து வந்த உதவி குறையும் அல்லது கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஆகவே கூட்டு தொழில் போன்ற தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது.

காரணம் தொழிலில் உங்களுடன் இணைந்து இருப்பவர்கள் திடீரென தங்கள் முதலீட்டை திரும்பி கேட்டு பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது அல்லது அதிக லாப ஆசையில் உங்களை தொந்தரவு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது

அதுபோலவே சம்பளத்திற்கு வேலைக்கு இருக்கும் கும்ப ராசி அவிட்டம் நட்சத்திர அன்பர்கள் மேலதிகாரிகள், வாடிக்கையாளர்கள் இவர்களிடம் மிக கவனமாக பழக வேண்டிய சந்தர்ப்பம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்

வார்த்தையில் இனிப்பாக பேசக்கூடியவர்கள் செயலில் கசப்பான அனுபவத்தை கொடுக்க வாய்ப்பு உள்ளது

உடல் நலம் விஷயத்தில் கும்ப ராசி அவிட்டம் நட்சத்திர அன்பர்கள் சில சில உடல் உபாதைகளை சந்திக்கக்கூடும் .அது தவிர பெரிய அளவில் உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. கடன் தொல்லைகள் கொஞ்சம் சிரமம் குறைந்து காணப்படும் .அதேபோல் புதிய கடன் கிடைப்பதில் இதுவரை நிலவி வந்த தடை குறையலாம் ஆனால் முற்றிலும் நீங்காது

மாணவர்கள் மற்றும் வேலையில் இருப்பவர்களும் கூட வெளிநாட்டு வேலை வாய்ப்பு அல்லது வெளிநாட்டு படிப்பு இவற்றின் வாய்ப்பு பெறுவார்கள் என்று சொல்லலாம்

திருமண தடை இதுவரை இருந்த கும்ப ராசி அவிட்டம் நட்சத்திர அன்பர்களுக்கு திருமண தடை விலகியது என்று எடுத்துக் கொள்ளலாம் .ஆனாலும் திருமணம் நடப்பதற்கு அதிக முயற்சியை செய்ய வேண்டிய அவசியம் இருந்து கொண்டே இருக்கும் திருமணத்திற்கான பொருத்தம் அமைவது தள்ளி போவது குறையலாம் முற்றிலும் நீங்காது

பூர்வீக சொத்துகளில் இருந்த தடை நீங்கியது என்று எடுத்துக் கொள்ளலாம். தந்தை வழி சொந்தங்கள் மூலம் அனுகூலமான செய்தி வந்து சேரும்

தாய் வழி சொந்தங்களிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது முக்கியம்

சனி உத்திரட்டாதி சாரத்தில் பயணம் செய்யும்போது கும்ப ராசி அவிட்டம் நட்சத்திர அன்பர்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத பாசிட்டிவ் திருப்பங்கள் வாழ்க்கையில் ஏற்படும். இதுவரை கற்பனையில் கூட எட்டிப் பார்க்காத சில விஷயங்கள் நன்மையாக நடந்து முடியும். திடீர் பல வரவு, திடீர் பதவி உயர்வு, திடீர் இட மாற்றம், திடீர் சொத்து அமைதல் போன்றவை நடக்கும். பல நல்ல விஷயங்கள் நடக்கும் அதுபோலவே திட்டமிட்ட பல விஷயங்களில் இருந்து வந்த தடை விலகி நல்லது நடக்கும்

கும்ப ராசி சதயம் நட்சத்திர அன்பர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

சனி பகவான் பூரட்டாதி சாரத்தில் பயணம் செய்யும்போது அதிக லாபத்தை பெறுவீர்கள். இதுவரை தடங்கலாகி இருந்த எல்லா விஷயங்களும் தடை நீங்கி பெரிய அளவில் லாபங்கள் கிடைக்கும்

வேலை பார்ப்பவர்களுக்கு வேலையில் இருந்து வந்த எல்லாவிதமான சங்கட சூழ்நிலைகளும் நிவர்த்தி ஆகி மகிழ்ச்சி நிலவும்.

எதிர்ப்பு காட்டியவர்கள் விலகிச் செல்லுவார்கள்.

வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் அடையக்கூடிய காலமாக சனி மீன ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்யும்போது காணப்படுகிறது. இந்த வாய்ப்பை வியாபாரிகள் தொழில் செய்பவர்கள் தவறாமல் நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

உடல் நிலையில் எதிர்பாராத சில சிறிய அளவிலான சிக்கல்கள் மட்டும் வந்து போகும் , அதனால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். கட்டுக்கடங்காத அளவில் சில நேரங்களில் நிறைய செலவுகள் அதிகமாகும். ஆனால் அதற்கு ஏற்ப வருமானம் வந்துவிடும் என்பதால் பயமோ கவலையோ அடைய வேண்டாம்

மாணவர்களுக்கு நல்ல காலம் என்று சொல்ல வேண்டும். சனிப்பெயர்ச்சியின் தொடக்க காலத்தில் மாணவர்கள் சற்று ஆர்வக்கோளாறு அடைவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் அது சனி உத்திரட்டாதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது சரியாகிவிடும். போட்டித் தேர்வுகளில் வெற்றி புதிய வாய்ப்புகள் உருவாவது போன்றவை மாணவர்களுக்கு நடக்கும்

திருமண தடை நீடிக்கும் . உரிய பரிகாரங்கள் செய்து தடைக்குரிய நிவாரணம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் சனி ரேவதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும்போது இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் நீங்கி அனுகூலம் உருவாகும்.

பொதுவில் கும்பராசி சதயம் நட்சத்திர அன்பர்கள் இந்த சனி பெயர்ச்சி காலத்தில் தங்கள் பேச்சில் நடத்தையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .சின்ன அளவில் செய்யும் சறுக்கல் கூட பெரிய பின் விளைவுகளை உருவாக்கும். வாக்குவாதம் விவாதத்தை தவிர்ப்பது நல்லது. வழக்குகள் இந்த காலகட்டத்தில் முடிவுக்கு வராமல் தத்தளிக்கும்

கொடுத்த கடன் வசூல் ஆவதில் தடை நீடிக்கும். நல்ல காரியத்திற்காக புதிய கடன் வாங்குவதிலும் அதிக சிக்கல் இருக்கும் .இந்த கடன் விஷயத்தில் மட்டும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் போது கும்ப ராசி சதயம் நட்சத்திர அன்பர்கள் பெரிய அளவில் லாபமடைவார்கள். அனைத்து தரப்பினருக்கும் லாபமான காலம் என்று சொல்லலாம்.

சனி பெயர்ச்சி திருத்தலங்கள்

கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம் ,இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் அன்பர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்

சந்திர ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் போது கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திர அன்பர்கள் அளவு கடந்த உற்சாகமடைவார்கள்

தகுதிக்கு மீறிய விஷயங்களில் ஆசைகள் உருவாகும். அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சியும் செய்வார்கள் பாதிக்குப் பாதி நிறைவேறும் .மீதி ஏமாற்றமாக அமையும் ஆகவே எச்சரிக்கையாக இருக்கவும் .திருமண தடை பலமாகும் ஆகவே எதிர்பார்ப்புகளை சரிவர மாற்றி அமைத்துக் கொண்டு திருமணத்திற்கு துணை தேட வேண்டியது அவசியம்

வேலைக்கு செல்பவர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இது நல்ல காலம் என்று சொல்வதற்கு இல்லை மந்தமாகவும் சுணக்கமாகவும் இருக்கும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்காது அதேபோல் வேலை பார்ப்பவர்களுக்கு வேலையில் மந்த நிலை நீடிக்கும் ஆனால் சனி உத்திரட்டாதி சாரத்தில் பயணம் செய்யும்போது நிலைமை முன்னேறும்

உடல் நலத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது அதே சமயம் பெரிய பாதிப்புகளும் எதுவும் உருவாகாது வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும் அதனால் சேமிப்பு குறைவாக இருப்பது போல தெரியும்

புதிய முதலீடுகள் செய்வதற்கும் சொத்து வாங்குவதற்கும் நல்ல காலம் இல்லை என்று சொல்ல வேண்டும்

தூர தேச பயணங்கள் தேடி வரும் என்றாலும் அதில் அதிக லாபம் இருக்காது என்பதால் கவனமாக முடிவு எடுக்க வேண்டும்

மாணவர்களுக்கு சாதாரணமான காலம் பெரிய அளவில் முன்னேற்றமும் அல்லது பின்னடைவு இருக்காது என்று சொல்லலாம்

சனி பகவான் ரேவதி சாரத்தின் சஞ்சாரம் செய்யும் போது கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திர அன்பர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் பண நஷ்டம் பொருள் நஷ்டம் விபத்து உடல் நல பாதிப்பு அதிக செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்

வழக்கு போன்ற விவகாரங்களில் முன்னேற்றம் இருக்காது

சனியின் வக்ர பலன்கள்

2025 ஜூலை 12 முதல் 2025 நவம்பர் 27வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் பெறுவார் நீங்கள் செய்துகொண்டிருந்த பயணமும் செலவும் கட்டுக்குள் வரும். இதனால் பண விரயம் தவிர்க்கப்படும். வக்ரம் நீங்கியவுடன், பழையபடி அலைய ஆரம்பித்து விடுவீர்கள்.

2026 ஜூலை 26 முதல் டிசம்பர் 10 வரை ரேவதி நட்சத்திரத்தில் வக்ரம் ஆவார். இந்த கால கட்டத்தில், உங்களால் கொஞ்சம் வீட்டுப்பக்கம் தலை காட்ட இயலும், அது ஜாமீன் கிடைப்பதால் இருக்கலாம் அல்லது மருத்துவர்கள், உங்களை வீட்டிலேயே இருக்க அனுமதிக்கலாம். எனவே ஏதோ ஒரு காரணத்தால், கும்ப ராசியார் வீட்டில் உண்டு உறங்க இயலும் வக்ரம் நீங்கிய உடன், மறுபடியும் தலைமறைவு வாழ்க்கை வாழ நேரிடும். வக்ர சனிக்கு ஸ்ரீ கோளிலி நாதரை வணங்கவும்:

சனி வழங்கும் மொத்த பலன்

கும்ப ராசிக்கு, சனி பகவான் தனது சார பலன், பார்வை பலன் இரண்டின் மூலமும் நற்பலன்கள் தர இயலாத நிலையில் இருக்கிறார். 8-ஆமிடத்தைப் பார்த்து கெடு பலனை அழிக்கிறார். அது ஒன்றுதான் அவரால் ஏற்படக்கூடிய நன்மை. மற்ற படி, அவரின் வக்ரகாலத்தில் மட்டுமே, சனியால் நல்ல பலன்களை கொடுத்து, ஜாதகரை நிதானிக்கச் செய்கிறது. கெடுபலன் அதிகமாகவும், நல்ல பலன் மிக குறைவாகவும் அமைந்துள்ளது.

பரிகாரங்கள்

கும்ப ராசியாருக்கு பாத சனி நடக்கும். எனவே திருநள்ளாறு சென்று சேவிக்கவும். ஸ்ரீ ஆஞ்சனேயரை வடை மாலை சாற்றி, தீபமேற்றி வணங்கவும். சனி பிரதோஷம் அன்று, சிவனை வழிபடுவது சிறப்பு. அருகிலுள்ள சனீஸ்வரர் சந்நிதிக்கு எள் தானியத்தை முடிச்சிட்டு, அகல் விளக்கில், வேறு திரியிட்டு தீபமேற்றி வழிபடவும். ஊனமுற்றவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுக்கவும். திருநல்லாட்டூர் ஸ்ரீ ஜெயவீர மங்கள ஆஞ்சநேயரை வணங்கவும். பண காணிக்கை செலுத்தவும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!