Homeஅம்மன் ஆலயங்கள்சக்தி தரும் ஆலயங்கள் :சியாமளா தேவி அம்மன்

சக்தி தரும் ஆலயங்கள் :சியாமளா தேவி அம்மன்

சியாமளா தேவி அம்மன்(Sri Shyamala Devi Temple)

 வரலாறு: 

சரஸ்வதியின் அம்சமான மாதங்கி என்று அழைக்கப்படும் அன்னை சியாமளா தேவி பறவைகள், வனம், வேட்டை போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையவள்.  இவளுக்கு வனதேவதை என்ற பெயரும் உண்டு.

 சிறப்பு:

 தசமஹா வித்யா என்றழைக்கப்படும் 10 தேவிகளில் சியாமளாதேவி ஒன்பதாவது தேவியாவாள்.இசை , நடனம் முதலிய அனைத்து கலைகளுடன் தொடர்புடைய இவள்  கையில் வீணையை கொண்டு சரஸ்வதியின் உருவமாக விளங்குகிறாள்.

சியாமளா தேவியை வழிபடுவதன் மூலம் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

Sri Shyamala Devi Temple

 பரிகாரம்:

 ஆசிரியர்களாக விரும்புபவர்கள் சியாமளா தேவியை வழிபடுவது அவசியம். அனைத்து விதமான கலைகளிலும் சிறந்து விளங்க சியாமளா தேவியை வழிபடுவது சிறப்பாகும்.

வழித்தடம்: 

சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் பேருந்து வழித்தடத்தில் அமைந்துள்ள ரத்தினமங்கலம் என்ற கிராமத்தில் 108 அம்மன் உடன் ஒரு அம்மனாக குடிகொண்டுள்ளார்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!