சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023 – தனுசு
ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது.
குரு பகவானின் அருள் பெற்ற தனுசு ராசி அன்பர்களே !!! சித்திரை மாதம் 8-ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடம் ராகுவுடன் சஞ்சாரம் செய்கிறார். சனி பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். ராகு கேதுக்கள் முறையை ஐப்பசி 13-ம் தேதி வரை 5 மற்றும் 11-ம் இடங்களிலும், பிறகு 4 மற்றும் 10-ம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
திருமணம் ஆகாதவர்களுக்கு இவ்வருடம் கண்டிப்பாக திருமணம் நடக்கும். கார்த்திகை முதல் பங்குனி மாதத்திற்குள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உருவாகும். தைரியமாக எதையும் செய்து வெற்றி கொள்வீர்கள். வீடு, மனை, வாகனம், புது தங்க, வெள்ளி நகைகள் வாங்கி அணியும் யோகம் உண்டு. தொழில் துறையில் நல்ல வளர்ச்சியும் லாபமும் உண்டு.
தெய்வஸ்தலங்களுக்கு யாத்திரை செய்து நல்ல தரிசனம் கிடைக்க பெறுவீர்கள். நல்ல காரியங்களுக்கு தலைமை தாங்குவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்க பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் அடிக்கடி சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பொருளாதார வளர்ச்சி சீராக உயரும். இளைய-மூத்த சகோதரர்களுக்கு நன்மை உண்டு. பெண்களுக்கு நல்ல ஏற்றம் உண்டு. கணவன் மனைவிக்குள் கருத்தொற்றுமை உண்டு.
பலன் தரும் பரிகாரம்
ஐப்பசி மாதம் 13ஆம் தேதிக்கு பிறகு புதன்கிழமை தோறும் விநாயகருக்கு விளக்கு வைத்து வர சகல தடைகளும் விலகி தொழில் விருத்தி ஏற்படும்.