சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023 – விருச்சிகம்
ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது.
செவ்வாய் பகவானின் அருள் பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே!!! சித்திரை மாதம் 8-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.சனி பகவான் இந்த வருடம் முழுவதும் அர்த்தாஷ்டம சனியாக 4-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். ராகு மற்றும் கேதுக்கள் முறையே ஐப்பசி 13-ம் தேதி வரை 6 மற்றும் 12-ம் இடங்களிலும், பிறகு 5 மற்றும் 11-ம் இடங்களிலும் சஞ்சாரம் செய்கிறார்கள்
தொழில் துறையில் தொழிலை நடத்துவதற்காகவும் குடும்பச் செலவுக்காகவும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வயிற்றில் முக்கியமாக கணையத்தில் கோளாறு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இடம் மாறுதல் உண்டாகும். தந்தையின் தொழில் பாதிக்கும். தாயின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்கள் மூலம் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பிறகு சரியாகும்.
கூட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் தனி குடித்தனம் செல்ல வேண்டி இருக்கும் இவ்வருடம் தொழில் ரீதியாக கடன் கொடுப்பதை முடிந்தவரை தவிர்க்கவும். குழந்தைகள் படிப்பு விஷயமாகவும், தொழில் விஷயமாகவும் உங்களை விட்டு பிரிவார்கள். மற்றவர்களுடன் பேசும் போது எச்சரிக்கை தேவை. தேவையற்ற விவாதங்கள் செய்ய வேண்டாம். தொழில் துறையில் அலைச்சல் காரணமாகவும் மந்த நிலை காரணமாகவும் தூக்கம் குறையும். மாணவர்கள் மிகவும் கருத்துடன் படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் பெற முடியும்.
பலன் தரும் பரிகாரம்
கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் அனைத்து நவகிரக தலங்களுக்கும் சென்று வழிபட்டு வந்தால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்