சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-ரிஷபம்
ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது.
சுக்கிர பகவானை ஆட்சி வீடாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!!! சித்திரை 8-ம் தேதி முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாகிய 12-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். சனிபகவான் 10-ம் இடத்திலும், ஐப்பசி 13ஆம் தேதி வரை ராகு கேதுக்கள் உங்கள் ராசிக்கு 12 மற்றும் 6-ம் இடங்களிலும், அதன் பிறகு 11 மற்றும் 5-ம் இடங்களிலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
இதன் மூலம் குடும்பத்தில் சுப விரயங்கள் நடக்கும். தொழில்துறை வளர்ச்சியில் தாமதம் ஏற்பட்டாலும் நிச்சய வளர்ச்சி உண்டு. உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு காரணமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள். வேலை பளு அதிகரிக்கும். தொழில் துறையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. தொழில் விஸ்தரிப்பு வேளையில் இறங்கலாம். மேலும் தொழிலில் மாற்றம் செய்து கொள்ளலாம்.
ஆரோக்கியத்தில் சிறு சிறு கோளாறுகள் ஏற்பட்டாலும் உடனடியாக அதற்கான தீர்வு கிடைக்கும். பழைய பாக்கிய பாதி அளவு வசூல் ஆகும். மாணவர்கள் நன்கு கருத்தூண்டி படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.
ஐப்பசி 13-ம் தேதிக்குப் பிறகு குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சிறிது அக்கறை தேவை. தொழில்துறையில் செலவினங்கள் குறையும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் நீங்கும். புதிய முயற்சிகள் பலனளிக்கும். தக்க சமயத்தில் நண்பர்கள் உறவினர்கள் உதவி செய்வார்கள். கருவுற்ற பெண்கள் பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது.
பலன் தரும் பரிகாரம்
வாரம் தோறும் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமும், ஆஞ்சநேயருக்கு நெய் தீபமும் ஏற்றி வர இந்த வருடம் சிறப்பான வருடமாக உங்களுக்கு அமையும்.