கொல்லூர் மூகாம்பிகை அம்மன்
மூகாம்பிகை அம்மன் வரலாறு:
கர்நாடக மாநிலத்தில் மங்களூரிலிருந்து 135 கிலோமீட்டர் தூரத்தில் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது. மூகாசுரன் என்ற அரக்கனின் அட்டூழியத்தை அழிக்க தேவர்களின் தவத்தில் இருந்து இந்த அம்மன் கொல்லூரில் தோன்றினார்.
சிறப்பு;
இந்த அம்மனின் இருபுறத்திலும் பஞ்சலோகத்தால் செய்த லட்சுமியையும் சரஸ்வதியையும் காணலாம். “ஆச்சார்ய சங்கரர் காலரோகணம்” என்ற பாடலில் இந்த அம்மனை புகழ்ந்து பாடியதால் அம்மனின் அருளைப் பெற்றார்.
இந்தக் கோயில் கேரளா வாஸ்து அடிப்படையில் 5 பிரகாரங்கள் கொண்டது .இங்குள்ள அம்மன் உக்கிர தேவதை என்பதால் ஏவல்,பில்லி, சூனியம்ஆகியவற்றை போக்கும் சக்தி கொண்டவள்.
கமாசுரன் என்ற அரக்கனை ஊமையாக்கியதால் இந்த அம்மனுக்கு மூகாம்பிகை என்று பெயர் வந்தது.மூகா என்றால் சமஸ்கிருதத்தில் ஊமை என்று பொருள். காலபைரவர் இங்கு ஷேத்ரபாலகர் ஆவார்.
பரிகாரம்:
கொல்லூரை சுற்றி சௌபர்ணிகா நதி ஓடுகின்றது. இது மலையில் தோன்றி, பல மூலிகைகளைக் கொண்டு வருவதால் இந்த ஆற்றில் நீராடுபவர்களின் நோய்கள் நீங்குகின்றன.
ஆச்சார்ய சங்கரருக்கு உடல் நலம் குன்றிய போது அம்மன் தானே கஷாயம் செய்து காப்பாற்றினார் .இதனால் இந்த கோவிலில் கஷாயம் தான் இன்றுவரை பிரசாதமாக வழங்கப்படுகிறது. எனவே பக்தர்கள் இத்தளத்திற்கு சென்று புனித நீராடி பிரசாதமாக கஷாயத்தை உட்கொண்டால் நமது அனைத்து நோய்களும் குணமாகும் என்பது ஐதீகம்.
மூகாம்பிகை சரஸ்வதி அம்சமாக திகழ்வதால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
வழித்தடம்:
கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் கொல்லூர் எனும் இடத்தில் இருக்கும் இத்தலத்திற்கு பேருந்து நேரடியாகவே வந்து செல்கின்றன..