சூரிய கிரகணம்
அனைத்து மக்களுக்கும் வேண்டுகோள்
ஓர் அன்பான வேண்டுகோள் .
வருகின்ற 10.06.2021 சூரிய கிரகணம் நடைபெற இருக்கிறது.
வருகின்ற வார நாட்களில் தாக்கம் அதிகமாக இருக்கும் . உங்களுக்கு நீங்களாகவே கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு மிக மிக கவனமாக இருக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் என்பதால் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். தேவைக்கு கூட வெளியே செல்லாமல் இந்த நான்கு நாட்கள் கழித்த பிறகு எல்லோரும் வெளியே செல்லுங்கள்.
ஏனென்றால் ரோககாரகர்கள் ஆகிய செவ்வாய், சனியின் சமசப்தம பார்வை மற்றும் ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் ஒரே சமயத்தில் அமைகின்றது.
குறிப்பாக மேஷம் ரிஷபம் கடகம் துலாம் விருச்சிகம் மகரம் ராசிக்காரர்கள் &
லக்ன காரர்கள் மிகமிக எச்சரிக்கையாக இருக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அடிக்கடி கை கால் முகம் கழுவுங்கள். தண்ணீரை காய்ச்சி குடியுங்கள.
சூடான உணவ எடுத்துக்கொள்ளுங்கள்.
சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பாக ஜனன ஜாதகத்தில் சூரியன் சந்திரன் ராகு கேது சனி சேர்க்கை பெற்றோ அல்லது பார்வை பெற்று இருப்பவர்கள் மிக மிக கவனமாக இருக்குமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இந்த காலகட்டத்தில் காலை சூரிய உதயத்தின் போதும் மாலை சூரிய அஸ்தமனம் போதும் இறைவழிபாட்டை அவரவர் இஷ்டதெய்வத்தை அவரவர் குல தெய்வத்தை வணங்கி வாருங்கள்.
தன்வந்திரி பகவானையும் மனதார பிரார்த்தனை செய்யுங்கள்
இது ஐரோப்பா, ஆசியா, வட / மேற்கு ஆபிரிக்கா, வட அமெரிக்கா, ஆர்க்டிக் பகுதிகள் மற்றும் அட்லாண்டிக் பகுதிகளில் காணக்கூடிய வருடாந்திர சூரிய கிரகணமாக இருக்கும்…