Homeஆன்மிக தகவல்திருப்பாவைதிருப்பாவை பாடல் 12 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 12 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 12

விடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்?

கேதார கௌள ராகம், ஆதிதாளம்

கனைத்து இளம் கற்று-எருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்!
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி,
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்;
இனித்தான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்!
அனைத்து இல்லத்தாரும் அறிந்து – ஏலோர் எம்பாவாய்.

திருப்பாவை பாடல் 12

எளிய தமிழ் விளக்கம்:

எருமைகள் தங்கள் இளம் கன்றுகளை எண்ணி இரக்கத்துடன் காம்புகள் வழியே பால் சுரக்கும். இதனால் வீடு முழுவதும் சேறாகியிருக்கும் பெருஞ்செல்வனின் வீட்டுத்தங்கையே! பனித்துளிகள் எங்கள் தலையில் விழ நாங்கள் உன் வீட்டு வாசலில் நிற்கிறோம். ராவணனைக் கொன்ற ராமனைப் புகழ்ந்து பாடுகிறோம். நீ வாய்திறவாமல் தூங்குவதை எல்லா வீட்டினரும் அறிந்து விட்டார்கள்.

எளிய ஆங்கில விளக்கம்:

Thiruppavai – 12 – Raga: Kedaragowla, Adi

O sister of a fortune-favored cowherd who owns cows with
boundless compassion, that pour milk from their udders at the
very thought of their calves, whose house is muddy due to shushing of
milk.
We stand at your door step with dew dropping on our heads.
Come open your mouth and sing the praise of the lord dear to our
heart,
who in anger slew the king of Lanka.
Atleast now wake up, why this heavy sleep ?
People in the neighbour know about you now!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!