Homeஆன்மிக தகவல்திருப்பாவைதிருப்பாவை பாடல் 8 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 8 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் – 8

கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி.

தன்யாசி ராகம, மிச்ரசாபு தாளம்

கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்; கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்,
ஆவாவென்று ஆராய்ந்து அருள் – ஏலோர் எம்பாவாய்.

எளிய தமிழ் விளக்கம்:

கிழக்குத் திசையில் வானம் வெளுத்துள்ளது.எருமைகள் சிறிது நேரம் பனிப்புல் மேய சிறு தோட்டங்களுக்குப்
பரவின.கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி,உன்னையும் அழைத்துச்செல்ல வாசலில் வந்து காத்திருக்கிறோம்.குதூகலமுடைய பெண்ணே! எழுந்திரு. கண்ணனைப் பாடி நோன்புமேற்கொள்வோம்.குதிரையாக வந்த அசுரனை (கேசியை) வாயைக் கிழித்தவன்,மல்லர்களைக் கொன்ற தேவாதிதேவன், அவனைச் சேவித்தால் நம் குறைகளை ஆராய்ந்து ஐயோ என்று இரங்கி வருவான்.

எளிய ஆங்கில விளக்கம்:திருப்பாவை பாடல் 7 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

Thiruppavai – 8 – Raga: Dhanyasi, Misra Chapu

The Eastern horizon brightens; buffaloes wander
out to gaze the dew-tipped morning grass.
The other girls were keen to go but we made them wait.
and came to call you. Dainty girl, wake up and join the band
Krishna ripped the horse’s jaws and killed the wrestlers.
If we go and approach him with our prayers
he will listen in attention and bestow his grace.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!