திருப்பாவை பாடல் 12
படுத்துறங்குவதை விட்டு எழுந்து வா
அடாணா ராகம், மிச்ரசாபு தாளம்
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்;
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பின காண், போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்து – ஏலோர் எம்பாவாய்.
எளிய தமிழ் விளக்கம்:
பறவையாக வந்த பகாசுரனின் வாயைப்பிளந்தவனும், கொடிய ராவணனுடைய தலையைக் கிள்ளியெறிந்தவனுமான திருமாலைப் பாடிக்கொண்டு எல்லோரும் பாவை நோன்பு நோற்கும் இடத்தை அடைந்து விட்டார்கள். சுக்கிரன் (வெள்ளிக்கிரகம்) உச்சிக்கு வந்து குரு(வியாழன்) மறைந்து விட்டது. பறவைகள் கூவுகின்றன. பூப்போன்ற மானின் கண்களை உடையவளே, உடல் குளிர நீராடாமல் படுத்துக் கிடக்கிறாயோ? நீ உன்னுடைய கபடத்தை விட்டுவிட்டு எங்களுடன் வந்து கலந்துவிடு!
எளிய ஆங்கில விளக்கம்:
Thiruppavai – 13 – Raga Athana, Misra Chapu
All the little ones have reached the place of worship singing the praise
of Rama
who killed Ravana and ripped the beaks of the demon-bird Bakasura.
The (Venus) morning star has risen and the evening star (Jupiter) has
set.
Harken, many birds have got up and they are chirping
O Maiden with eyes that excel the lotus bud,
do you still lie in the bed instead of immersing yourself in the cool
waters on
this auspicious day ? Give up your restrainment and join us