Homeஆன்மிக தகவல்திருப்பாவைதிருப்பாவை பாடல் 18 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 18 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 18

நந்தகோபரின் மருமகளான நப்பின்னை பிராட்டியை எழுப்புதல்.

ஸாவேரி ராகம், ஆதி தாளம்

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்-வலியன்
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண், மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில்-இனங்கள் கூவின காண்,
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து – ஏலோர் எம்பாவாய்.

திருப்பாவை

எளிய தமிழ் விளக்கம்:

மத யானையை மோதித் தள்ளுகின்ற வலிமையும், போரில் பின்வாங்காத தோளைப் படைத்தவனுமான நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னையே! மணம் வீசும் கூந்தலை உடையவளே கதவைத்திற. கோழிகள் சுற்றிலும் வந்து கூவுவதைக் கேள்! குருக்கத்திக்(மல்லிகைப்பூ) கொடிப் பந்தலில் குயில்கள் பலமுறை கூவி விட்டன. பந்தைத் தாங்கிய விரல்களையுடையவளே! உன் கணவன் பேர் பாட வந்துள்ளோம். உன்தாமரைக் கையால் வளையல்கள் ஒலிக்க மகிழ்ச்சியுடன் வந்து கதைவை திறக்கவேணும்.

எளிய ஆங்கில விளக்கம்:

Thiruppavai – 18 – Raga: Saveri, Adi

Open the door, Nappinnai Daughter-in-law of Nandagopala
who has broad shoulders and invincible strength like that of a valiant
tusker
Look the cocks crows everywhere;
cuckoos atop the bower of Kurukkatti(jasmine) have cooed
O lady with ball-clasping slender fingers
as we wish to sing your husband’s praise
May you come happily to open the door with your lotus-like hand
making the bangles jingling softly

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!