Homeஆன்மிக தகவல்திருப்பாவைதிருப்பாவை பாடல் 19 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 19 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 19

நப்பின்னை பிராட்டியையும் கண்ணனையும் எழுப்புதல்.

ஸஹானா ராகம், ஆதி தாளம்

குத்து விளக்கு எரியக் கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச-சயனத்தின் மேல் ஏறிக்
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்;
மைத் தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்,
எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால்;
தத்துவம் அன்று தகவு – ஏலோர் எம்பாவாய்.

திருப்பாவை

எளிய தமிழ் விளக்கம்:

நிலை விளக்குகள் ஒளிவீச, தந்தக் கால்களையுடைய கட்டிலில் மெத்தென்ற பஞ்சுப் படுக்கை மீது கொத்தாக மலர்ந்திருக்கும் பூக்களைச் சூட்டிய கூந்தலுடைய நப்பின்னையின் மார்பில் தலையை வைத்துக் கொள்பவனே, வாய்திறந்து பேசு! மைக்கண்ணுடைய நப்பின்னையே! நீ உன் கணவனை சிறுபொழுதும் படுக்கையை விட்டு எழுந்திருக்க விடவில்லை. கணமாகிலும், நீ அவன் பிரிவை சகிக்க மாட்டாய். ஆ! நீ இப்படி (எதிராக) இருப்பது நியாயமும் ஆகாது; குணமும் ஆகாது.

எளிய ஆங்கில விளக்கம்:

Thiruppavai – 19 – Raga: Sahana, Adi

As the lamps are glowing beside,
O lord sleeping on a soft cotton bed over an ornate cot
resting on the flower-coiffured Nappinnai’s bosom
May you, at least open your mouth!
Look, O Collyrirum eyed lady
You do not wake up your spouse even for a moment
Your unwillingness to part with him even once is neither fair nor just

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!