சிவபெருமானின் அருள் பெற -சிவராத்திரி(Shivaratri)
சிவராத்திரி: உலகமும் அதில் உயிர்கள் தோன்றியது எப்போது என்பதை விஞ்ஞானத்தால் சரியாக கணிக்க முடியவில்லை. என்றாலும் அப்படி நிகழ்ந்த ஒன்றை இந்துக்கள் ஞானத்தால் அறிந்து கொண்டாடும் நாள் ஒன்று உண்டு. அது மகா சிவராத்திரி.
இதுவரை பிரளயம் எனப்படும் மூன்று ஊழிக் காலங்கள் தோன்றியதாக நிலவியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மூன்றாவதாக நீரின் மூலம் தோன்றியதை மட்டும் நாம் அறிய முடிகிறது. உலகில் உற்பத்தி நின்று போனது எங்கும் நீர் மயமாய் வெள்ள காடாக இருந்தது படைக்கும் பிரம்மனும் காக்கும் திருமாலும் தங்கள் கடமைகளை செய்யாமல் மாறுபட்ட நின்றனர் அப்போது சிவபெருமான் வெள்ளப்பெருக்கில் அளந்தறிய முடியாத பேரொளிப் பிழம்பாக அஞ்சேல் என்று அருள் செய்ததாக திருமூலர்
“கருவறைமூடிக் கலந்தொழும் வெள்ளத்து
இருவருங் கோவென்று இகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளியாகி
அருவரையாய் நின்று அருள் புரிந்தானே”
திருமந்திரத்தில் குறிப்பிடுகின்றார்.
பிரளய காலத்தின் போது உயிர்களெல்லாம் படைக்கப்பட சிவபெருமான் இடமே ஒடுங்கின. உலகங்கள் தோன்றவில்லை இன் நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அன்னை உமையம்மை அண்டங்கள் அதில் உயிர்கள் தோன்றி இயங்கும் பொருட்டு ஐயனின் நினைத்து தியானம் மேற்கொண்டார். சிவபெருமான் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களையும் உயிர்களையும் படைத்த அருளினார்.
உமையவள் சிவபெருமானிடம் ஐயனே நான் தங்களை நினைத்து தியானித்துப் போற்றிய காலம் சிவராத்திரி என்று பெயர் வரவேண்டும் அதனை சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைபிடித்து வாழ்வாங்கு வாழ்ந்து எல்லா நலன்களையும் பெற்று முக்தி அடைய வேண்டும் என்று பிரார்த்தித்தார் சிவபெருமானும் அவ்வாறே நிகழட்டும் என்று அருள் புரிந்தார்.
அம்பிகையை தொடர்ந்து நந்தியம் பெருமானும், சனகாதி முனிவர்களும் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து தங்களின் விருப்பம் நிறைவேற பெற்றனர்
நந்தியை குருவாக பெற்ற திருமூலர்
“சக்தி சிவன்தன் விளையாட்டுத் தாரணி
சக்தி சிவமும் ஆம் சிவன் சக்தியுமாகும்
சக்தி சிவம் அன்றித் தாபரம் வேறில்லை
சக்திதான் என்று சமைந்து உரு ஆகுமே“
சக்தி சிவன் இருவரின் விளையாட்டின் விளைவு தரணி எனும் இந்த பூமி சக்தியே சிவம் சிவமே சக்தி இரண்டும் ஒன்றே சக்தி சிவம் இன்றி உடம்பெடுத்த உயிர்கள் எதுவுமே இல்லை சக்தி ஆன்மாவோடு பொருந்தி அவற்றின் வாழ்விற்கு அருள் உருவம் கொள்ளும். சிவம் அருவம் சிவசக்தி அருவுருவம், உருவம் என்று கூறுகின்றார்
ஒரு உயிரினம் முக்தி அடைய வேண்டுமானால் அந்த உயிர் மனிதப் பிறவியாக பிறக்கவேண்டும் அப்படி மனித பிறவி எடுத்தோர் முக்தி நிலையை அடைய சிவபெருமானை வழிபட மிகச் சிறப்பான நாள் மகா சிவராத்திரி
சிவராத்திரி (Shivaratri) விரதம் ஐந்து வகைப்படும்
நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்
தினமும் அருவ உருவ சிவலிங்கத் திருமேனியைத் தொட்டு பூஜிக்கும் சிவாச்சாரியார்கள் ஒருவேளை மட்டுமே உணவு உண்டு உலக உயிர்கள் நலமுடன் வாழ வேண்டி கடைபிடிக்கும் விரதம் நித்திய சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும் சிவனடியார்கள் பலர் இந்த சிவராத்திரியை மாதம்தோறும் கடைபிடித்து வருகின்றனர்
உத்தராயண காலம் தை மாதம் வரும் முதல் சதுர்த்தசி திதியிலும் தட்சிணாயன காலமாகிய ஆடி மாதம் வரும் முதல் சதுர்த்தசி திதிகளிலும் கடைபிடிப்பது பட்ச சிவராத்திரி ஆகும்
யோகிகள் வளர்பிறை சதுர்தசியிலும் தேய்பிறை சதுர்த்தசியிலும் என மாதம் இருமுறை கடைபிடிப்பது யோக சிவராத்திரி ஆகும்
ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடுவது மகாசிவராத்திரி ஆகும்
சிவராத்திரி அன்று முழுக்க இரவு கண் விழித்து நான்கு கால பூஜைகளையும் கண்டு தொழுவதும் சிவநாமம் சொல்லி சிவநினைவோடு இருப்பதும் சீரான சிறப்பான நன்மைகள் பலவும் தரும்
திருமுறையை அறியாதவர்கள் சிவபெருமானின் திரு ஐந்தெழுத்து ஆகிய நமசிவாய எனும் மந்திரத்தை மட்டும் ஓதி மகா சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து இறைவனை வணங்க முன் வினையினால் வரும் துன்பங்கள் நீங்கி இப்பிறவியின் பயனாக வாழ்வில் எல்லா நன்மைகளையும் பெற்று மகிழ்வான வாழ்வு வந்து முடிவில் மீண்டும் பிறவா நிலை வந்து எய்தும் என்பது புராண வாக்கு
அறியாமல் சிவராத்திரி பூஜை தரிசித்தவர்கள் ஆலயத்தை வலம் வந்தவர்கள் கூட பேரானந்த வாழ்வு பெற்ற புராண கதைகள் ஏராளம் உண்டு
மகாசிவராத்திரியன்று உங்களால் முடிந்தால் இரவெல்லாம் விழித்து உண்ணாமல் விரதம் இருந்து கருணா மூர்த்தியை வழிபடுங்கள் இயலாதவர்கள் மகேசனை மனதில் நினைத்து சாத்வீகமான உணவை மிகக் கொஞ்சமாக உண்டு இரவு விழித்திருந்து ஈசனை வணங்குங்கள் நேசத்தோடு உங்கள் வாழ்வினை முக்காலமும் சிறக்க செய்வார் முக்கண்ணன்