விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: மிதுன ராசி
புத்திகாரனாகிய புதனை ஆட்சி வீடாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 12-மிடம் இருந்த குரு பகவான் மே 14ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு ஜென்ம குருவாக வருகிறார். மேலும் அக்டோபர் 18ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு அதிசாரமாக 2மிடம் வருகிறார். மீண்டும் டிசம்பர் 5ஆம் தேதி முதல் வக்ரகதியில் உங்கள் ராசிக்கு ஜென்ம குருவாக திரும்புகிறார்.
ராகு-கேதுக்கள் முறையே மே 18ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 10,4ம் இடங்களில் இருந்து 9,3ம் இடங்களுக்கு வருகிறார்கள்.
இவ்வருடம் முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 10மிடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.

இதன் மூலம் கணவன்-மனைவிக்குள் இருந்த குழப்பங்கள் தீர்ந்து அன்னியோன்யம் பெறுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இயற்கையாகவே குழந்தை பாக்கியம் கிடைக்கும். கூட்டு வியாபாரத்திலிருந்த பிரச்சனைகள் தீரும். தொழில்துறையில் வேலை பளு அதிகமானாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும். வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு காரணமாக இடம் மாற்றம் உண்டாகும்.
இந்த வருடம் திருமணம் முடிவாகும். காலதாமதம் செய்யாமல் திருமணத்தை முடிப்பது நல்லது. தெய்வ திருத்தலங்களுக்கு யாத்திரைகள் செய்து நல்ல தரிசனம் கிடைக்க பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் விலகும். நல்ல காரியங்களுக்கு தலைமை தாங்குவீர்கள்.
மாணவர்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் பெற முடியும். படித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில்துறையில் புதிய முயற்சிகளில் காலதாமதமாக வெற்றி கிடைக்கும்.
பரிகாரம்
பிரதி வியாழக்கிழமை குருபகவானுக்கு நெய் தீபம், சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் வைக்கவும். ஒரு முறை ஆலங்குடி அல்லது திட்டை சென்று குருபகவானே வணங்கி விட்டு வரவும்.
மொத்தத்தில் இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு 60% நற்பலன்களை நல்கும் புத்தாண்டாக அமையும்