கல்வி சிறப்பாக இருக்க இந்த யோகங்கள் உங்கள் ஜாதகத்தில் இருக்கா ? இருந்தால் நீங்கள் அதிஷ்டசாலிதான்!!

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

கல்வி சிறப்பாக அமைய உதவி செய்யும் யோகங்கள்

பத்திர யோகம்

கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சிமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை யாவும் அமையும். கற்றவர்களின் சபையில் ஒரு முக்கியமான பங்கு வகிப்பவராக இருப்பார்.

பலருக்கு ஆலோசனை வழங்கும் திறன் இருக்கும். தன்னுடைய பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து விடுவார், கல்வி அறிவு மிகச் சிறப்பாக இருக்கும், கணிதத்தில் மேதையாக இருப்பார். பேச்சால், வாக்கால் முன்னேற்றம் ஏற்படும். வக்கீல் பணியில் திறமைசாலியாக இருப்பார். சமுதாயத்தில் மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய அளவிற்கு உன்னதமான நிலை உண்டாகும். சகல கலைகளையும் கற்று தேறக்கூடிய ஆற்றல் உண்டாகும். வாக்கு சாதுர்யமும், கற்பனை திறனும் உண்டாகும் என்பதால் கலைத்துறையில் பெரிய இடத்தை பிடிக்கும் வாய்ப்பு அமையும்.

யோகங்கள்

புதாதித்ய யோகம்

ஒருவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் இணைந்து அமையப் பெறுவது புதாத்திய யோகமாகும். இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத் தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் உண்டாகும். அரசு வழியில் அனுகூலம், வியாபாரத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும்.

நிபுனாயோகம்

சூரியனும் புதனும் இணைந்து 1,4,8 ஆகிய ஸ்தானங்களில் ஏதாவது ஒன்றியல் அமையப் பெறுவது நிபுனா யோகம் ஆகும். நல்ல அறிவாற்றல், கல்வியில் தேர்ச்சி, வாழ்வில் பல சாதனைகளைச் செய்து பலரின் பாராட்டுதல்களைப் பெறக்கூடிய வாய்ப்பு போன்ற யாவும் நிபுனா யோகத்தால் அமையும்.

சரஸ்வதி யோகம்

சுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்கள் கேந்திர திரிகோணத்திலோ அல்லது 2ம் வீட்டிலோ அமைந்து, குருபகவானும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ நட்பு வீட்டிலோ அமையப் பெற்றால், சரஸ்வதி யோகம் உண்டாகிறது. பெயரிலேயே சரஸ்வதியிருப்பதால் இந்த யோகத்தால் நல்ல கல்வியாற்றல் தேவைக்கேற்ற செல்வம், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலை யாவும் உண்டாகும்.

யோகங்கள்

நாத யோகம்

சுக்கிரன், புதன் மற்றும் 9ஆம் அதிபதி ஆகியோர் கேந்திர, திரிகோணங்களில் அமைந்தோ, ஆட்சி உச்சம் பெற்றோ, நட்பு வீடுகளிலோ அமைந்திருந்தால் நாத யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு நல்ல பேச்சாற்றல், நகைச்சுவை உணர்வு, ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு, கல்வியில் மேன்மை உண்டாகும். அனைவராலும் விரும்பத் தகுந்த அளவிற்கு நற்குணங்களை பெற்றிருப்பார்.

பாஸ்கரா யோகம்

சூரியனுக்கு 12ல் அல்லது 2ல் சந்திரன் அமைவதும், சந்திரனுக்கு திரிகோணமான 1,5,9ல் குரு இருப்பதும் பாஸ்கர யோகமாகும். இதனால் நல்ல எழுத்தாற்றலும் கற்பனை வளமும் கல்வியாற்றலும் உணடாகும்.

கலாநிதி யோகம்

லக்னம் அல்லது நவாம்ச லக்னத்திற்கு 2 அல்லது 5ல் குரு அமைந்து அந்த வீடு சுக்கிரன் அல்லது புதன் வீடாகி குரு புதன் சுக்கிரன் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் சம்மந்தபட்டால் கலாநிதி யோகம் உண்டாகும். இதனால் அற்புதமான அறிவாற்றல் கல்வி யோகம் ஏற்படும்.

யோகங்கள்

தேனு யோகம்

2ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று 1,4,5,7,9,10 இருந்து 2ம் பாவத்தை சுபர் பார்த்து ராகு அல்லது கேது முயற்சி ஸ்தானமான 3ல் அமைவது தேனு யோகமாகும். இதனால் கல்வியில் சாதனைகளை செய்யும் ஆற்றல் உண்டாகும்.

சங்க யோகம்

லக்னாதிபதி பலம் பெற்று 5,6ஆம் அதிபதிகள் ஒன்றுக்கு ஒன்று கேந்திர கோணம் பெறுவது, அல்லது 5,6ஆம் அதிபதிகள் யாரேனும் ஒருவர் ஆட்சி உச்சம் பெறுவது சங்க யோகமாகும். இதனால் கல்வி நிலை உயர்வடையும்.

Leave a Comment

error: Content is protected !!