குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்-அஸ்வினி-பரணி-கிருத்திகை
அஸ்வினி நட்சத்திரத்தில்(1,2,3,4-ஆம் பாதத்தில்)பிறந்தவர்களுக்கு:
- குரு அதிக தன்னம்பிக்கை தரப்போகிறார்.
- எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்னும் மன தைரியம் உண்டாகும்.
- மற்றவர்கள் பயந்து ஒதுங்கும் விஷயத்தை கூட நீங்கள் துணிந்து இறங்கி செய்து வென்று காட்டுவீர்கள்.
- எல்லாவற்றையும்விட ஞாபக சக்தி பெருகி ஓங்கும்.
- இந்த நட்சத்திர மாணவர்களுக்கு அதிலும் மருத்துவம்-பொறியியல் போன்ற உயர் கல்வி மாணவர்களுக்கு இது வரப்பிரசாதமல்லவா!
பரிகாரம்: மலைமீதிருக்கும் விநாயகரை வணங்கவும்.
பரணி நட்சத்திரத்தில்(1,2,3,4-ஆம் பாதத்தில்) பிறந்தவர்களுக்கு:
- கும்ப குரு உங்களை சுறுசுறுப்பாக- பரபரப்பாக மாற்றிவிடுவார்.
- இதுவரை சும்மாயிருந்த பெண்களுக்கு நாம் ஏதாவது செய்து நன்கு காசு பார்க்க வேண்டும் எனும் உத்வேகம் எழும்.
- நான்கு பெண்களை உடன் சேர்த்துக்கொண்டு கூட்டுறவு வகையில் தெரிந்த கைத்தொழில் அல்லது வேறு திறமைகளை நான்குபேர் அறியச் செய்து வாழ்வில் மேன்மை பெறுவர்.
- அதுமட்டுமல்ல; கையில் நாலு காசும் பார்த்து விடுவார்கள்.
- இந்த நட்சத்திர ஆண்களுக்கும் இதுவரை சந்தித்து வாழ்வில் முன்னேற்ற பாதைக்கு வழி வகுக்க வேண்டும் என எதிர்பார்த்த ஒரு பெரிய-மேன்மையான-அதிகாரம் மிக்கவர்களின் நட்பு கிடைக்கும்.
- வாழ்வின் அடுத்தபடிக்கு நகர தொடங்குவீர்கள்.
பரிகாரம்:அம்மனை-மகாலட்சுமியை வணங்கவும்.
கிருத்திகை (1ஆம் பாதத்தில்) பிறந்தவர்களுக்கு:
- குரு நல்ல சிந்தனையை தருவார். நல்ல சிந்தனை நல்ல எண்ணங்களை தரும். நல்லெண்ணங்கள் நல்ல சொற்களைத் தரும். நல்ல சொற்கள் நல்ல நட்பை தேடித்தரும். நல்ல நட்பு சிறந்த வாழ்க்கையை தரும். சிறந்த வாழ்க்கை உச்சநிலையை தரும். இந்த உச்ச வாழ்வு நிலை நீங்கள் நான்கு பேருக்கு கை கொடுத்து உதவி அவர்களை மேன்மை படுத்த உதவும்.
- இவையெல்லாம் எவ்விதம் நடக்கும்? வேறென்ன.. உங்களில் பலர் உயர் பதவி ,அமைச்சர், அமைச்சரின் செயலாளர், உதவியாளர் என ஏதோ ஒன்றில் உயரத்திற்கு சென்று விடுவீர்கள். பிறகு நீங்களும் உயர்ந்து உங்களை சுற்றி உள்ளவர்களையும் உயர்த்துவீர்கள்.
பரிகாரம்: மலைமேல் உள்ள சிவனை வணங்கவும்.