Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -மீனம்

சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -மீனம்

சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -மீனம்

நம்பிக்கையை காப்பற்றும் குணம் கொண்ட  மீனராசி அன்பர்களே!!!

சனி பகவான் 27 .12. 2020 முதல் 19. 12. 2023 வரை லாப வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும், எடுத்த வேலையை திறம்பட முடிப்பீர்கள், சோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள், மனத்தெளிவு அடைவீர்கள். 
  • குடும்பத்தில் நிம்மதி பிறக்கும் 
  • அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் 
  • பணவரவுக்கு இனி குறைவிருக்காது 
  • சேமிக்கும் எண்ணமும் ஏற்படும் 
  • பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும் 
  • பூர்வீகச் சொத்தை மாற்றி உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு வாங்குவீர்கள்
  •  பிள்ளைகள்  இல்லா  தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்
  •  மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள்
  •  மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும் 
  • பழைய கடன் பிரச்சினையைத் தீர்க்க புது வழி பிறக்கும் 
  • சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும் 
  • வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்
  •  நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள்  

சனி பகவானின் பார்வை 

சனி பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் 
  • டென்ஷன் கோபம் அலர்ஜி வந்து நீங்கும்
  •  தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள் 
  • செரிமான கோளாறு நரம்பு பிரச்சனைகள் வந்து நீங்கும் 

சனி பகவான் உங்களின் 5-ஆம் வீட்டைப் பார்ப்பதால் 

  • பிள்ளைகளின் போக்கில் கவனம் செலுத்துங்கள் 
  • படிப்பு உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும் 

சனி பகவான் உங்களின் எட்டாம் வீட்டை பார்ப்பதால் 

  • அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும் 
  • வாகன பயணத்தில் கவனம் தேவை 

இல்லத்தரசிகளே!!! 

  • ஆடை அணிகலன்கள் சேரும் 
  • கணவர் உங்களின் புதிய முயற்சிகளை ஆதரவளிப்பார் 
  • நாத்தனாருக்கு நல்ல இடத்தில் திருமணம் முடியும் 
  • அலுவலகம் செல்லும் பெண்களே தேங்கிக் கிடந்த பணிகளை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள் 
  • சம்பளம் உயரும் 

வியாபாரிகளே!!! 

  • தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள்
  •  வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும் 
  • கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள் 
  • வெளிநாட்டு தொடர்புடைய நிறுவனங்கள் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும் 
  • ரியல் எஸ்டேட், பதிப்பகம் வகைகளால் லாபம் அடைவீர்கள்

 உத்தியோகஸ்தர்களே!!! 

  • உங்களின் நிர்வாகத் திறமை கூடும் 
  • புது பொறுப்புகள் தேடி வரும் 
  • மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள் 
  • சம்பளம் உயரும் 
  • கணினி துறையினரே பணி செய்யும் நிறுவனத்தில் இருந்து விலகி சம்பளம் சலுகைகள் அதிகம் உள்ள வேலைக்கு மாறுவீர்கள்

 பரிகாரம் 

மகான்களின் அதிஷ்டானங்களை தரிசித்து வாருங்கள். உழவாரப் பணிகளில் பங்களிப்பு செய்யுங்கள் .சங்கடங்கள் அனைத்தும் நீங்கும் சந்தோஷம் உண்டாகும்
சனி பெயர்ச்சி பலன்கள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!