திருவண்ணாமலை
🔶 இறைவன்-அருணாச்சலேஸ்வரர்,
அண்ணாமலையார்
🔶 இறைவி-அபிதகுஜாம்பால், உண்ணாமுலை
🔶தலமரம் – மகிழம்
🔶 தீர்த்தம்-பிரமம்
🔶பாடல்– சம்பந்தர்,அப்பர்
🔶நாடு-நடு நாடு
🔶வரிசை எண்-54
🔶தொலைபேசி– 04175-252438
🔱அருகிலிருக்கும் தலங்கள்🔱
அறையணிநல்லூர்,திருக்கோவிலூர், இடையாறு
🔶கோவில் திறந்திருக்கும் நேரம்
காலை – 4:00-12:30
மாலை -4:00-9:30
🔱தலசிறப்புகள்🔱
நினைக்க முக்தி தரும் தலம். இரமண மகரிஷி,அருணகிரி நாதர் அருள் பெற்ற தலம்.பஞ்ச பூத தளங்களில் அக்கினி தலம்
பண் - நட்டபாடை
இராகம் - நாட்டை
திருமுறை- ஒன்று
பதிகம்-10
பாடல் -1
🔱சம்பந்தர்🔱
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள்
மழலைம் முழவதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவாவண்ணம் அறுமே
நேரிசை
இராகம் -
திருமுறை- நான்கு
பதிகம்-63
பாடல் -1
🔱 திருநாவுக்கரசர் 🔱
ஓதிமாமலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்தோள் சுடர்மழுப் படையினானே
ஆதியே அமரர்கோவே அணி அண்ணாமலையுளானே
நீதியால் நின்னையல்லால் நினையுமா நினைவிலேனே
குறுந்தொகை
இராகம் -
திருமுறை- ஐந்து
பதிகம்-5
பாடல் -5
🔱திருநாவுக்கரசர் 🔱
தேடிச்சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர் ஆடிப்பாடி அண்ணாமலை கைதொழ ஓடிப்போகும் நமது உள்ள வினைகளே
வழித்தடம்
திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது கோவில்.அண்ணாமலை கிரிவல பாதை சுற்றளவு 15 கிலோ மீட்டர்
🔱கோவில் இருப்பிடம்🔱