மகர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் தரும் ஆச்சரியமான பலன்கள்!

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

சனி பகவான்

சனி பகவான்

லக்னத்தில் தன் சுய இராசியான மகர ராசியில் சனி இருந்தால் ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். தைரியசாலியாக திகழ்வார். பெயர், புகழ், இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனைவியால் கவலை உண்டாகும். வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டியதாயிருக்கும். அரசாங்க விஷயத்தில் லாபம் கிடைக்கும். அதில் நல்ல பெயர் ஏற்படும்.

2-ம் பாவத்தில் தன் சுய இராசியான கும்பத்தில் சனி இருந்தால் ஜாதகர் பணத்தை சேமிப்பதில் மிகவும் கவனமாக இருப்பார். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். உடல் நலம் நன்றாக இருக்கும். எனினும் சிறிய சிறிய தடைகள் ஏற்படும். கடுமையாக உழைத்து நிறைய பணம் சம்பாதிப்பார். ஜாதகர் பெயர், புகழுக்காக உழைப்பார். சுயநலவாதியாக இருப்பார்.

3-ம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சனி இருந்தால் உடன் பிறந்தோருடன் பல பிரச்சனைகள் ஏற்படும். ஜாதகர் தைரியசாலியாகவும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார். குடும்ப சந்தோஷத்தில் சிறிய குறை இருக்கும்.

சனி பகவான்

4-ம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சனி நீசம் அடைகிறார். அதனால் தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு இருக்கும். பூமி. வீடு வாங்குவதில் பிரச்சனை ஏற்படும். உடல் நலனில் குறை இருக்கும். குடும்ப சந்தோஷத்தில் பிரச்சனை உண்டாகும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பணம் சம்பாதிப்பதிலேயே எப்போதும் மனம் ஈடுபடும்.

5-ம் பாவத்தில் தன் நண்பரான சுக்கிரனின் ரிஷப ராசியில் சனி இருந்தால் ஜாதகர் புத்தி கூர்மையுடன் இருப்பார். பிள்ளைகளால் பெயர் புகழ் கிடைக்கும். ஜாதகர் சுயநலவாதியாக இருப்பார். அதிகமாக பேசுவார். குடும்பத்தை நன்கு பராமரிப்பார்.

6-ம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சனி இருந்தால் உடல் நலத்தில் சிறிய குறை இருக்கும். பித்த நோய் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவருடன் கருத்து வேறுபாடு நிலவும். பணத்தை சேமிப்பதில் பிரச்சனை ஏற்படும். கடுமையான உழைப்பாளியாக இருப்பார். உடன்பிறந்தவருடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.

7-ம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் சனி இருந்தால் ஜாதகருக்கு மனைவியால் சந்தோஷம் கிட்டும். ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். சொந்தமாக வீடு வாங்குவதில் பிரச்சனைகள் ஏற்படும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு உண்டாகும். ஜாதகர் சுயமரியாதையுடன் வாழ்வார்.

8-ம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் சனி இருந்தால் நீண்ட ஆயுள் இருக்கும். முன்னோரின் சொத்து கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஜாதகர் சுமாரான தோற்றத்துடன் இருப்பார். உடல் நலத்தில் சிறிய குறை உண்டு. குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும். தந்தையின் ஆதரவு கிடைக்கும் .அரசாங்க வேலைகள் அனுகூலமாக இருக்கும்.அதன் மூலம் வளர்ச்சி உண்டாகும். அறிவு பலமாக வேலை செய்யும்.

சனி பகவான்

9-ம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் சனி இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தர்மத்தை கடைப்பிடிப்பார். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். ஜாதகர் எதிரிகளை வெல்வார். சண்டை சச்சரவில் வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும்.

10-ம் பாவத்தில் சுக்கிரனின் துலாம் ராசியில் சனி உச்சம் அடைகிறார்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். வியாபாரத்தில் பல தடைகளை கடந்து வெற்றி பெறுவார். மனைவியுடன் உறவில் சில தடைகள் ஏற்படும். ஜாதகர் கடுமையான உழைப்பாளியாகவும், தைரியசாலியாகவும் இருப்பார்.

11-ம் பாவத்தில் செவ்வாயின் விருச்சக ராசியில் சனி இருந்தால் நல்ல வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். ஜாதகர் அழகான தோற்றம் கொண்டவர். மன பலம் இருக்கும். பெயர்,புகழ் கிட்டும். எப்போதும் பணத்தை சேமிப்பதை பற்றிய சிந்தனையுடனே ஜாதகர் இருப்பார். கலைத்திறன் உள்ளவர். நீண்ட காலம் வாழ வேண்டும் என்று ஆவல் கொண்டவர். நல்ல வசதி படைத்தவராக சந்தோஷமாக வாழ்வார்.

12-ம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சனி இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகருக்கு வெளி தொடர்புகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும். உடல்நலத்தில் சிறிய குறை உண்டு. பணம் சம்பாதிப்பதற்காக கடுமையாக உழைக்க நேரும். ஜாதகர் தன் பகைவர்களை வெல்வார். நல்ல பண வரவிருக்கும்.

Leave a Comment

error: Content is protected !!