மனையடி சாஸ்திரம்–மனைகளின் அமைப்பு
கட்டிடத்தினை சரியான முறையில் கட்டுவதற்கு மனையின் அமைப்பினை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மனைகளின் வடிவம் சுப-அசுப பலன்களை அளிக்கத்தக்கவையாக இருக்கின்றன. மனைகளின் வடிவமைப்புகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
கட்டிடம் கட்டக்கூடிய மனையானது சரியான வடிவமைப்பில் இருந்தால்தான் அதில் கட்டப்படும் வீட்டில் வசிப்பவர்களுக்கு ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளமான வாழ்க்கையை அளிக்கும். மனைகளின் பல்வேறு வடிவ அமைப்புகளை இனி காண்போம்.
சதுர வடிவ மனை
வடிவ அமைப்பு :
நான்கு புறமும் சம நீள ,அகலமும்-நான்கு மூலைகளும் ஒரே வடிவில் அமைத்திருப்பது சதுர வடிவ மனயாகும்.
சதுர வடிவ மனையின் பலன் :
செல்வ வளத்தை அளிக்கும்.
செவ்வக வடிவ மனை
வடிவ அமைப்பு :
மனையின் கிழக்கு மேற்கு பகுதி சம அளவாகவும்,வடக்கு தெற்கு பகுதி சம அளவாகவும் இருந்தால் செவ்வக வடிவில் இருப்பது செவ்வக வடிவ மனையாகும்.
செவ்வக வடிவ மனையின் பலன் :
அனைத்திலும் வெற்றியை தரும்.
வட்ட வடிவ மனை
வடிவ அமைப்பு :
வட்ட வடிவமாக அமைத்திருக்கும் மனையானது வட்ட மனை எனப்படும்.
வட்ட வடிவ மனையின் பலன் :
கல்வி ,செல்வ வளர்ச்சியை தரும்.ஆலயங்கள் ,திருமண மண்டபங்கள்,பள்ளி ,கல்லூரிகள் அமைக்க இவ்வகை மனையானது சிறப்பானதாகும்.
பத்ராசன வடிவ மனை
வடிவ அமைப்பு :
மனையின் கிழக்கு-மேற்கு (அ) வடக்கு தெற்கு இரு திசைகளின் நீளம் சமமாக இருந்து, இரு திசைகளில் ஒரே அளவில் உட்புறம் குவிந்து இருப்பது பத்ராசன பூமி எனப்படும்.
பத்ராசன வடிவ மனையின் பலன் :
அனைத்து வசதிகளையும் அளிக்கும்.
சக்கர வடிவ மனை
வடிவ அமைப்பு :
மனைகளுடன் கூடிய சக்கர வடிவில் அமைந்திருப்பது சக்கர மனையாகும்.
சக்கர வடிவ மனையின் பலன் :
ஏழ்மை,கவலை,வம்ச விருத்தியின்மை,போன்ற தீய பலன்களை அளிக்கும்.
கத்தி வடிவ மனை
வடிவ அமைப்பு :
நான்கு புறமும் சமமற்ற செவ்வக வடிவில் அமைந்திருப்பது.மேலும் ஒரு முனை நீண்டு இருப்பது கத்தி வடிவ மனையாகும்.
கத்தி வடிவ மனையின் பலன் :
கவலை,துக்கம் போன்ற தீய பலன்களை அளிக்கும்.வட கிழக்கில் ஈசான்யத்தில் இவ்வாறு நீண்டு இருப்பது சிறப்பு என தற்கால வாஸ்து வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர்.ஆனால் தொன்மையான ஜோதிட நூல்களில் இது தீய பலனை தரும் என கூறப்படுகிறது.
முக்கோண வடிவ மனை
வடிவ அமைப்பு :
மூன்று பக்கமும் சம அளவில் நீள-அகலத்துடன் அமைந்திருப்பது முக்கோண மனையாகும்.
முக்கோண வடிவ மனையின் பலன் :
உயர் அதிகாரிகளிடம் இருந்து தொல்லை,அரசு வகையில் தொந்தரவு,பயம்,வம்ச விருத்தியின்மை போன்ற தீய பலன்களை தரும்.
வண்டி வடிவ மனை
வடிவ அமைப்பு :
மூன்று வகையான அளவுகளை கொண்டு வண்டி வடிவில் அமைத்திருப்பது வண்டி வடிவ மனையாகும்.
வண்டி வடிவ மனையின் பலன் :
மகிழ்ச்சியின்மை,கவலை,ஏழ்மை போன்ற தீய பலனை அளிக்கும்.
உருளை வடிவ மனை
வடிவ அமைப்பு :
இரண்டு எதிர் எதிர் திசைகளின் நீளம் சமமாகவும்,இரண்டுஎதிர் எதிர் திசைகளின் அகலம் சமமாகவும்,மிக மிக நீண்ட செவ்வக வடிவில் இருப்பது உருளை வடிவ மனை யாகும்.
உருளை வடிவ மனையின் பலன் :
செல்வம் மற்றும் கால்நடைகளை இழத்தல் போன்ற தீய பலன்களை தரும்.
செண்டை வடிவ மனை
வடிவ அமைப்பு :
ஒரு செவ்வகத்தில் இரண்டு புறமும் இரண்டு சதுரங்களை ஒட்டி வைத்தது போல் அமைந்திருப்பது செண்டை வடிவ மனையாகும்.
செண்டை வடிவ மனையின் பலன் :
கண் நோயயை தரும்.குழந்தைகள் குருடாக பிறப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.
உடுக்கை வடிவ மனை
வடிவ அமைப்பு :
உடுக்கை போன்ற வடிவத்தில் இருக்கும்.
உடுக்கை வடிவ மனையின் பலன்:
மனை வசிப்பதற்கு நல்லதல்ல. இந்த வகை மனையானது பெண்களால் தொல்லை ,புத்திரபாக்கியமின்மை போன்ற தீய பலன்களை தரும்.
பிரண்முக வடிவ மனை
வடிவ அமைப்பு :
சதுரம் அல்லது செவ்வக வடிவில் 3பக்கமும் அமைத்திருந்தது ஒரு பக்கம் உட்புறம் குவிந்திருப்பது பிரண்முக வடிவ மனையாகும்.
பிரண்முக வடிவ மனையின் பலன்:
செல்வ இழப்பு ,உறவினர்களுடன் பகை போன்ற தீய பலன்களை தரும்.
L வடிவ மனை
வடிவ அமைப்பு :
L வடிவில் அமையப்பெற்றிருக்கும்.
L வடிவ மனையின் பலன்:
செல்வ இழப்பு ,உத்தியோக இழப்பு போன்ற தீய பலன்களை தரும்.
ஆமை வடிவ மனை
வடிவ அமைப்பு :
நீள் வட்டத்தில் நடுவில் கோடு போட்டது போன்று இருக்கும் மனை ஆமை வடிவ மனையாகும்.
ஆமை வடிவ மனையின் பலன்:
தொல்லைகள்,கஷ்டம்,சிறைவாசம்,தண்டனை போன்ற தீய பலன்களை தரும்.
வாளி வடிவ மனை
வடிவ அமைப்பு :
வாளி போன்ற அமைப்பில் இருக்கும்.
வாளி வடிவ மனையின் பலன்:
ஏழ்மை ,தொழுநோய் போன்ற தீய பலன்களை தரும்.
பானை வடிவ மனை
வடிவ அமைப்பு :
பானை போன்ற வடிவில் அமைத்திருக்கும்.
பானை வடிவ மனையின் பலன்:
தொழுநோய் போன்ற தீய பலன்களை தரும்.