Homeஜோதிட குறிப்புகள்மிதுன ராசி பற்றிய 6 முக்கிய குறிப்புகள்

மிதுன ராசி பற்றிய 6 முக்கிய குறிப்புகள்

மிதுன ராசி

1.எந்த சமயத்திலும் உழைக்கத் தயங்காதவராக இருக்கும் உங்களுக்கு பலம் , பலவீனம் இரண்டுமே உங்க புத்திசாலித்தனம்தான். எத்தகைய சூழலையும் சமாளிக்கக்கூடிய நீங்கள் , வேண்டாத சிக்கலையும் சில சமயம் விலைகொடுத்து வாங்கறீங்களே , அதைத் தவிர்த்தாலே எல்லாமும் நன்மையாகும் .

2.புதன் கிரஹத்தின் ஆதிக்கத்துல உள்ள ராசியில் ,பிறந்த உங்களுக்கு ,இயல்பாகவே எதையும் சட்டென்று கற்றுக்கற திறமையும் , எளிதில் புரிஞ்சுக்கற புத்திசாலித்தனமும் இருக்கும்.அதேசமயம் எந்தச் செயலையும் முழுமையாக முடிக்காம அரைகுறையாக விடும் குணத்தை மாற்றிக்கறது முக்கியம்.

3.உங்க பெயரில் வீடு வாங்கற சமயத்துல அல்லது கட்டும் போது அந்த வீட்டின் தலைவாசல் மேற்கு திசையில் அமைவது நல்லது.வடக்கைத் தவிருங்கள்.

மிதுன ராசி

4.உங்க வாழ்க்கைல முக்கியமான உயர்கல்வி , வேலை , சுபகாரியம் இப்படி ஏதாவது விஷயமாகச் செல்லும்போது வயதுல முதிய ஏழைத் தம்பதிகள் யாருக்காவது , இயன்ற உணவு , உடையை தானம் செய்துட்டுச் செல்வது , உங்க எதிர்காலம் பசுமையாக இருக்க உதவும்.

5.உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் , பச்சை. இது அடர்பச்சை , இளம் பச்சைன்னு எதுவாக இருந்தாலும் சிறப்பான பலனே கிடைக்கும்.வாழ்க்கைல முக்கியமான சமயங்கள்ல இந்த நிறத்துல உடை அணிவது சிறப்பு . அது இயலாவிட்டால் இந்த நிறத்துல ஒரு சிறு கைக்குட்டையை வைச்சுக்குங்க.

6.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் படத்தை வீட்டுல வைச்சு புதன் கிழமைகள்ல பூஜை செய்யுங்க. அன்றைய தினம் அசைவம் தவிருங்க. முடிஞ்சா ஒருவேளை உண்ணா விரதம் இருங்க . மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால உங்க வாழ்க்கை மிகப் பிரகாசமாகும்க .

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!