அதிசய கோவில்
இந்த உலகம் பல அதிசயங்கள் நிறைந்தது. இன்னும் பல அமானுஷ்யங்களுக்கு விடை தேடபட்டு கொண்டுதான் இருக்கிறது.அப்படி ஒரு அதிசயம் சுருளிமலையில்(Surulimalai) உள்ளது. அந்த காலத்தில் கோவில் கட்டும் கட்டும் பொழுது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனித்தன்மையுடன் தான் அமைத்துள்ளனர். ஆனால் இந்த முருகன் கோவிலுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு.
தேனி(Templetheni) மாவட்டம் சுருளிமலை அருள்மிகு சுருளிவேலப்பர்(SuruliVellappar) கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.இங்கு சுருளிவேலப்பர் மூலவராக உள்ளார் .
சிவனின் திருமணத்தின் போது அனைவரும் இமயமலை சென்று விட வடக்கு உயர்ந்து,தெற்கு தாழ்ந்து இருந்தது. இதனால் உலகம் சமநிலையை இழக்க சிவன் தென்பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அழைத்து அனுப்பி உலகை சமநிலைப்படுத்த தினார். பின் இங்கு உள்ள குகைக்கு சிவன் அகத்தியருக்கு மணக்கோலத்தில் காட்சி அளித்தார்.
இங்குள்ள அதிசயம் என்னவென்றால் இங்குள்ள விபூதி குகையில் மணல் ஈரம் பட்டு காய்ந்த பிறகு விபூதி ஆக மாறுகிறது. இந்த இடத்தில் உள்ள ஒரு மரத்தில் தொடர்ந்து நீர் கொட்டி அது காய்ந்த பின்பு பாறையாக மாறியது.மேலும் இந்த நீர் பட்ட இலை,தழைகள் 40 நாட்கள் நீரில் நனைந்த பின்பு பாறையாக மாறுகிறது.
எவ்வளவு நாட்கள் இந்தப் பாறைகளின் மீது தண்ணீர் விழுந்து கொண்டிருந்தாலும் அதன் மீது பாசான் பிடிக்காது மற்றும் வழக்காதுன்பது மேலும் ஒரு அதிசயம்.இங்குள்ள நீர் வீழ்ச்சி இசையோடு இணைந்து சுருதி கொடுத்ததால் சுருதி தீர்த்தம் என்று அழைக்கப்பட்டு பின்னர் பின்னர் மருவி சுருளி தீர்த்தம் ஆனது.இங்குள்ள முருகப்பெருமான் பழனி மலையில் உள்ள முருகனைப் போன்றே ஆண்டி வடிவில் காட்சி அளிப்பதால் இங்குள்ள மூலவர் சுருளியாண்டவர் என்று அழைக்கின்றனர்…