காதல் திருமணத்திற்கான கிரக சேர்க்கைகள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

காதல் திருமணத்திற்கான கிரக சேர்க்கைகள்:

  • புதன் இருக்கும் ராசியிலிருந்து எண்ணும்போது 1-5-9 – ம் இடங்களில் கேது இருந்தால் ஜாதகன் காதல் வலையில் வீழ்வான்.
  • புதன் இருக்கும் ராசியிலிருந்து எண்ணும்போது 2-6-10 – ம் இடங்களில் கேது இருந்தாலும் ஜாதகன் காதல் வலையில் விழ்வான்.
  • புதன் வக்கிரமடைந்து அதற்கு 4-8-12 – ம் இடங்களில் கேது இருந்தாலும் ஜாதகன் காதல் வலையில் வீழ்வான்.
  • புதன் பரிவர்த்தனை அடைந்து , புதனின் சொந்த வீடுகளான மிதுனம் அல்லது கன்னியிலிருந்து எண்ணும்போது 1-5-9 -ம் இடங்களில் கேது இருந்தால் ஜாதகன் காதல் வலையில் வீழ்வான்.
  • புதன் பரிவர்த்தனை அடைந்து , புதனின் சொந்த வீடான மிதுனம் அல்லது கன்னியிலிருந்து எண்ணும்போது 2-6-10 ம் இடங்களில் கேது இருந்தாலும் ஜாதகன் காதல் வலையில் வீழ்வான்.
  • வக்கிர புதன் பரிவர்த்தனை பெற்றால் , புதனின் சொந்த வீடுகளான மிதுனம் , கன்னியிலிருந்து எண்ணும்போது 4-8 12 -ம் இடங்களில் கேது இருந்தால் ஜாதகன் காதல் வலையில் வீழ்வான்.
  • புதன் , கேதுவோடு குருவோ அல்லது சுக்கிரனோ சேர்ந்தாலோ அல்லது பார்த்தாலோ காதல் வெற்றி அடையும்.
  • புதன் கேதுவோடு சனி இணைந்தாலோ அல்லது பார்த்தாலோ காதல் வெற்றி அடைவதில் தாமதம் உண்டாகும்.
  • புதன் ,கேதுவோடு சந்திரன் இணைந்தாலோ அல்லது பார்த்தாலோ ஜாதகன் காதலித்து அவமானப்படுவான். கெட்ட பெயர் உண்டாகும்.காதலனின் அல்லது காதலியின் மனம் அடிக்கடி மாறும். இதனால் பல குழப்பங்கள் உண்டாகும்.
  • புதன் கேதுவோடு சந்திரனும் , சுக்கிரனும் இணைந்தால் திருமணத்திற்கு முன்பே உடல்சுகத்தை அனுபவிப்பார் ஜாதகர் . காதலியானவர் திருமணத்திற்கு முன்டே கர்ப்பமடைவார். காதலருக்கு பல காதலிகளோ அல்லது காதலர்களோ இருக்க வாய்ப்புண்டு.

Leave a Comment

error: Content is protected !!