தசரதர் அருளிய சனைச்சர ஸ்தோத்திரம்!
ஒருமுறை தசரதரைச் சந்தித்த அவரின் ஜோதிடர்கள், “சனி பகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்து ரோஹிணி நட்சத்திரத் தில், சகடத்தை உடைத்து சஞ்சாரம் செய்யப் போகிறார். இதனால் 12 வருட காலம் கடும் பஞ்சம் உண்டாகும்” என்றனர்.
இதற்குத் தீர்வு வேண்டி பலவாறு சிந்தித்த தசரதர் நிறைவில், சனி பகவான் மீது ‘சம்ஹார அஸ்திர’த்தை பிரயோகிக்கத் தயாரானார். அப்போது சனி பகவான் காட்சியளித்தார். அவரை வணங்கி, “சூரிய புத்திரரே! சூரிய- சந்திரர் இருக்கும் வரை, பூமியில் நீர்நிலைகள் வறண்டு போகவோ, 12 வருட கால வறட்சி ஏற்படுவதோ கூடாது” என்று வேண்டினார் தசரதர். அப்படியே வரம் தந்தார் சனிபகவான்.
உடனே தசரதர், சரஸ்வதி மற்றும் விநாய கரை தியானித்து, சனி பகவான் குறித்து ஸ்தோத்திரம் இயற்றினார்.
‘ஒருவர் இந்த ஸ்லோகத்தை ஒரு முறை சொல்லி இருந்தாலும்கூட, அவருக்கு எமது சஞ்சாரத்தால் எவ்வித இன்னலும் நேராமல் காப்பேன். சனிக்கிழமை அன்று இந்த ஸ்லோகத்தைப் பக்தியுடன் சொல்லி பூஜை செய்பவருக்கு எந்த இன்னலும் தர மாட்டேன். கோசாரம், ஜன்ம லக்னம், தசைகள், புக்திகள் ஆகியவற்றில் வேறு ஒரு கிரகத்தால் ஏற்படும் பீடைகளில் இருந்தும் காப்பேன்’ என்பது சனி பகவானின் திருவாக்கு. ஆகவே, சகலரும் இந்த ஸ்தோத்திரத்தைப் படித்து அருள் பெறலாம். வடமொழி ஸ்லோகத்தைச் சொல்வது கடினம் என நினைப்பவர்கள், தமிழில் தரப்பட்டுள்ள (கருத்து) வரிகளைச் சொல்லி, சனிபகவானை வழிபடலாம்.
சனி பகவான் ஸ்தோத்திரம்
நம: க்ருஷ்ணாய நீலாய
சிதிகண்ட நிபாய ச
நமோ நீலமயூகாய நீலோத்பல நிபாயச
நமோ நிர்மாம்ஸ தேஹாய
தீர்க்க ச்ருதிஜடாய ச
நமோ விசால நேத்ராய சுஷ்கோதர பயாநக
நம: பௌருஷகாத்ராய
ஸ்தூலரோம்ணே ச தே நம:
நமோ நித்யம் க்ஷதார்த்தாய
ஹ்யத்ருப்தாய ச தே நம:
நமோ கோராய ரௌத்ராய
பீஷணாய கராளிநே
நமோ தீர்க்காய சுஷ்காய
காலதம்ஷ்ட்ர நமோஸ்து தே
நமஸ்தே கோரரூபாய
துர்நிரீக்ஷக்ஷ்யாய தே நம:
நமஸ்தே ஸர்வபக்ஷாய
வலீமுக நமோஸ்து தே
ஸீர்யபுத்ர நமஸ்தேஸ்து
பாஸ்கரே பயதாயிநே
அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து
ஸம்வர்த்தக நமோஸ்து தே
நமோ மந்தகதே துப்யம்
நிஷ்ப்ரபாய நமோ நம:
தபநாஜ்ஜாத தேஹாய
நித்யயோகதராய ச
ஜ்ஞாநசர் நமஸ்தேஸ்து
காஸ்யபாத்மஜ ஸீநவே
துஷ்டோ ததாஸி ராஜ்யம்
த்வம் க்ருத்தோ ஹரஸி தத்க்ஷணாத்
தேவாஸீர மநுஷ்யாஸ்ச
ஸித்த வித்யாதரோரகா:
த்வயாவலோகிதா: ஸர்வே
தைந்யமாசு வ்ரஜந்தி தே
ப்ரஹ்மா சக்ரோ யமஸ்சைவ முநய:
ஸப்த தாரகா:
ராஜ்யப்ரஷ்டா: பதந்தீஹ தவ த்ருஷ்ட்யாவலோகிதா:
த்வயா வலோகிதாஸ்தேபி
நாசம் யாந்தி ஸமூலத:
ப்ரஸாதம் குரு மே ஸௌரே
ப்ரணத்யா ஹி த்வமர்த்தித:
கருத்து: கருப்பானவரும், நீலமானவரும், மயில் கழுத்து போன்ற நிறம் உள்ளவருமான சனிபகவானே தங்களை வணங்குகிறேன்.
கருத்த காந்தியுள்ளவரும் நீலோத்பல மலரைப் போன்ற வண்ணம் கொண்டவருமான சனீஸ்வரரே உம்மை வணங்குகிறேன்.
மகிமைமிகு தேகமும், நீண்ட காதும் ஜடையும் கொண்டவரும், குறுகிய வயிறும் நீள் விழிகளும் பயங்கர ரூபமும் கொண்டவருமான சனைச்சரரே உம்மை வணங்குகிறேன்.
வீரக்களை பொலியும் பௌருஷம் வாய்ந்த சரீரம் கொண்ட சனீஸ்வரரே உம்மை வணங்குகிறேன். பெரிய ரோமங்கள் பெற்ற பகவானே, உம்மை வணங்குகிறேன்.
(அநீதியாளர்களுக்கு) கோபம், ரௌத்ரம், பயங்கரம் மிகுந்தவரும் பயத்தைத் தருபவரு மான சனிபகவானே உம்மை வணங்குகிறோம்.
நீண்டவரும் குறுகியவருமான சனீஸ்வரரே நமஸ்காரம்; பயங்கரமான தித்திப் பற்களைக் கொண்ட சனீஸ்வரரே வணங்குகிறோம்.
கோரமான ஸ்வரூபம் கொண்ட தங்களுக்கு நமஸ்காரம். காண்பதற்கரிய சனி பகவானே உம்மை வணங்குகிறோம்.
சூரிய மைந்தரும் அபயம் அளிப்பவருமான சனி பகவானே உம்மை வணங்குகிறோம். கீழ்ப்பார்வை உள்ளவரே, பிரளயத்தையும் உருவாக்க வல்லவரே, மெள்ள நகர்பவரே சனீஸ்வரரே உம்மை வணங்குகிறோம்.
சூரியனிடமிருந்து பிறந்தவரும் நித்யம் யோகத்தைத் தரிப்பவரும் ஞானக்கண்உடையவரும் காச்யபரின் புத்திரரான சூரிய குமாரரே உம்மை வணங்குகிறோம்.
தாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பின் ராஜ்ஜியத்தை அளிப்பீர்; கோபம் கொண்டீர் எனில் அக்கணமே அந்தப் பாக்கியத்தை அபகரிப்பீர். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள் யாவரிடமும் நீதி பரிபாலனம் செய்பவர் நீர்.
பிரம்மன், இந்திரன், யமன், சப்த ரிஷிகள், நட்சத்திரங்கள் இவர்கள் எவரும் தங்கள் பார்வைக்குத் தப்பவில்லை. சூர்யபுத்திரரே உம்மை வணங்கிப் பணிகிறேன்; யாசிக்கி றேன்; எமக்கு அருள்புரிய வேண்டும்!