Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 துலாம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 துலாம்

குரு பெயர்ச்சி பலன்கள் (Guru Peyarchi Palangal) – துலாம்

சித்திரை மாதம் 9ம் தேதி (22.04.2023) சனிக்கிழமை, உதயாதி நாழிகை 43:30 அதாவது இரவு 11: 27 மணிக்கு ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம் மீன ராசியில் இருந்து அஸ்வினி நட்சத்திரம் 1ம் பாதம் மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பெயர்ச்சி கிரக நிலைகள் -2023

சுக்கிர பகவானின் அருள் பெற்ற துலாம் ராசி அன்பர்களே!!! வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானமான 7-வது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே லாபம் (11-மிடம் ) சகோதரன் ,தைரியம் (3-மிடம்) ஜென்ம ராசி(1மிடம்) ஸ்தானங்களில் பதியும்.

இந்த குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகளில் துலாம் ராசியும் ஒன்று. கடந்த ஒரு வருடமாக ஆறாம் இடத்திலிருந்து பல இடையூறுகளை தந்த குரு பகவான். சம சப்தமான ஏழாம் இடத்திற்கு வருவதால் கடன் சுமைகள் குறையும். கொடுத்த பணம் வசூல் ஆகும். மன நிம்மதி கிடைக்கும்.

பொதுவாகவே துலாம் ராசிக்காரர்கள் அனுபவசாலிகள் ஆவார்கள். பக்குவங்கள், நிறைய ஏற்றத்தாழ்வுகளை கண்டவர்கள். சிறு வயது முதலே உழைக்கத் தொடங்கி இருப்பார்கள். எதிலும் போராடி ஜெயித்து விடுவார்கள்.

ராசிக்கு குரு ஏழில் சஞ்சரிக்கும் காலத்தில் சுப காரியங்கள் கைகூடும். தடைபட்ட திருமணங்கள் தடையின்றி நடக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். அழகான புத்திர பாக்கியம் அமையும். எதிர்பாராத பண வரவுகளால் வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மனைவி வழியில் மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம், தொழில் லாபம் உண்டாகும்.

புதிய தொழில்கள் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்கள் செய்யலாம். சாஸ்திர கலைகளை கற்றறியும் வாய்ப்புகளும் உருவாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். மதிப்பு, அந்தஸ்து, கௌரவம் கூடும்.

குரு பெயர்ச்சி பலன்கள்

குருவின் பார்வை பலன்கள்

குரு தான் நின்ற வீட்டை விட பார்க்கும் இடங்களும் பலம்பெறும் அவ்வகையில் ராசிக்கு ஐந்தாம் பார்வையாக 11 இடத்தை பார்ப்பதால், உடலில் அபாரமான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். ஏற்கனவே இருந்த தீராத நோய்கள் நிரந்தரமாக குணமாகும். சிக்கலான நோய்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாக நிரந்தர தீர்வு கிடைக்கும். மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். பண சேமிப்பில் நாட்டம் காணப்படும்.

ராசிக்கு ஏழாம் பார்வையாக ஒன்றாம் இடத்தை பார்ப்பதால் சிந்தனை திறன் மேம்படும். அறிவாற்றல் மூலமாக பல காரியங்களை எளிதில் முடித்து காட்டுவீர்கள். தன்னிச்சையாக எந்த முடிவும் எடுப்பீர்கள். உடல் எடை குறைப்பு ,உடல் நலன் அக்கறை, நேரத்துக்கான உணவு சரியான முறையில் அமைவதால் உடல் ஆரோக்கியமாக காணப்படும்.

ஒன்பதாம் பார்வையாக மூன்றாம் இடத்தை பார்ப்பதால், தகவல் தொழில்நுட்பங்கள் மூலமாக சிறப்பான பலன்களை அடையலாம். ஷேர் மார்க்கெட். ஆன்லைன் மூலமாக வருமானம் வரக்கூடும். கடன்கள் விரைவில் அடைபடும். விற்காத சொத்துக்கள் எளிதில் விற்பனையாகும். சிலருக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளும் உருவாகும். வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள்

பலன் தரும் பரிகாரம்

வாரம் தோறும் வெள்ளிக்கிழமையில் அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வாருங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் குடியிருக்கும் நேரம் கிடைத்தால் பௌர்ணமி திதியில் குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!