சிறப்பு விதிப்படி திருமண பொருத்தம் நிர்ணயம்
- ரிஷபம் , கடகம் , கள்ளி , விருச்சிகம் , மகரம் , மீனம் போன்ற ராசிகளில் சூரி – சந்- புதன் சேர்க்கை – பார்வை இருந்து , செவ்வாய் பார்வை ஏற்பட்டால் விந்து பலம் இல்லை . அலித்தன்மை
- ரிஷபம் , கடகம் , கன்னி , விருச்சிகம் , மகரம் , மீனம் போன்ற ராசிகளில் சந்திரன் அல்லது சனி இருந்து , மேஷம் , மிதுனம் , சிம்மம் , துலாம் , தனுக , கும்பம் போன்ற ராசிகளில் சூரியன் அல்லது புதன் இருப்பின் – விந்து பலம் குறைவு – அலித்தன்மை.
- ஆண் ஜாதகத்தில 3 – க்குரியவர் , சுக்கிரன் 7 க்குரியவர் , கிருத்திகை , ரோகிணி , ஆயில்யம் , மகம் , சுவாதி , விசாகம் , உத்திராடம் , திருவோணம் , ரேவதி போனற நட்சத்திரங்கள் ஒன்றில் இருப்பின் விந்து பலகீனத்தால் புத்திர உற்பத்தி நடைபெறும்.
- ஆண் – பெண் இருவரும் அமாவாசை – கிரஹணம் அஷ்டமி – சதுர்த்தி – ஏகாதசி போன்ற திதிகளில் பிறந்து இருத்தல் கூடாது.
- ஆண் – பெண் இருவரும் வைதிருதி நாம யோகத்தில் பிறந்து இருந்தால் கூடாது. புத்திரதோஷம்.
- ஆண் – பெண் ஜாதகங்கள் இரண்டிலும் 1 , 2 , 5 , 7 , 8,9 – க்குரியவர்கள் தன் வீட்டிற்கு 6,8,12 – ல் மறைந்திருத்தல் கூடாது.
- இருவர் ஜாதகத்திலும் 2 , 4 , 5 , 6 , 7 , 8 , 9-ஆம் வீடுகளில் அல்லது ஏதாவது பாவ கிரகங்கள் இருப்பது சரி இல்லை.
- இருவர் ஜாதகத்திலும் சந் – சுக் – சூரி – கேது போன்றவர்கள் 8- வது ராசியிலிருந்தால் தீமை.சுக்கிரன் , சந்திரன் நீசம் பெறுவது கூடாது.
- இருவரும் செவ்வாய் வீட்டை லக்னம் , ராசியாக பெறக்கூடாது .
- இருவருக்கும் 5 – ஆம் பாவம் ரிஷபம் , சிம்மம் , கன்னி , விருச்சிக ராசியாக வரக்கூடாது .
- இருவர் ஜாதகத்திலும் 5 – ஆம் பாவத்தில் இராகு – கேது இருந்து , அம்ச ராசியில் சனி வீட்டைப் பெறுதல் கூடாது.
- 7க்குரியவர் ,9ல் குரு சந்திரன், சூரியனுடன் சேர்க்கை பெற்று 2 ல் செவ்வாய் , சுக்கிரன் – கேது இருப்பின் தாரம் 2 ஆகும் வாய்ப்பும் உண்டு.காதல் வகையில் மாட்டிக் கொண்டு தொல்லையால் அவதிப்படுவார்.இல்லறம் நல்ல விதமாக அமையாது .
- 1 ல் சூரியன் , 7 க்குரியவர் 12 ல் , 2 க்குரியவர் 2 ல் ராகு , செவ்வாய் சேர்க்கை இருப்பின் முதலில் வறுமையில் வாடி பின்னர் ஓர் நிலை ஏற்பட்டு முதல் மனைவி , 2 குழந்தைக்கு தாயாகி , நெருப்பால் கண்டம் ஏற்பட்டு மரணம் அடைந்து விடுவாள். 2 வது தாரம் அமையும்.
- 7 க்குரியவர் சனி , சூரியன் , புதன் சேர்க்கை 2 ல் இருந்து 12 ல் சுக்கிரன் இருந்தால் மனைவியை விவாகரத்து செய்து விட்டு .2 வதாக விவாகரத்து செய்த பெண்ணையே காதல் மூலமாக மனைவியாக கொள்வான்.
- 7 க்குரியவர் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று , செவ்வாய் பார்வை சேர்க்கை இருந்து , 7 மிடத்தை சனி பார்த்தால் , காதலால் பீடிக்கப்பட்டு திருமணத்திற்கும் முன்பாக குழந்தை உற்பத்தியாகி , பிறகு திருமணம் நடந்து , இல்லற வாழ்க்கை சோபிக்காது.
- 7 க்குரியவர் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று , 2 , 7 மிடத்தை சனி பார்த்தால் தாரம் இரண்டு , முதல் தாரம் ஓடி விடுவாள் இரண்டாம் தாரத்திடமும் முன் வாழ்க்கை நன்றாக இருக்காது.
- 2,7 க்குரியவர் , 3 க்குரியவர் 11 ல் ராகுவுடன் சேர்க்கை இரண்டு தாரம் ஏற்படும்.
- 6 ல் சுக்கிரன் , இவருக்கு 12 ல் 7 க்குரியவர் இருந்து சனி பார்வை ஏற்பட்டாலும் சுக்கிரனுடன் செவ்வாய் பார்வை ஏற்பட்டாலும் மத்திம வயதில் இல்லற துறவறம் பூண்டு , வைத்தியத் துறையில் , தெய்வக் காரியங்களில் சிறப்பு பெறுவர் . மனைவியும் துறவறம் எடுத்துக் கொள்வாள்.
- 7 க்குரியவர் ராகுவுடன் சேர்க்கை பெற்று , சுக்கிரன் பலம் இழந்து இருப்பின் திருமணம் நடைபெறுவது கடினம்.
- 8 ல் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை , சனி பார்வை இருந்ததால் கால தாமதமான திருமணம் , சுக்கிரன் திசை தந்தைக்கு மாரகம் செய்யும்.
- 11 க்குரியவர்க்கு , 7 க்குரியவர் திரிகோணம் பெற்று சுபர் பார்வை பெற்றால் மனைவி உயிருடன் இருக்கும்போது பல பெண்களை விவாகம் செய்வான்.
- 7- க்குரியவர் 3 லிருந்து , 2 ல் சுக்கிரன் சூரியன் – புதன் சேர்க்கை இருப்பின் , கல்வியால் விவாகம் தடைப்பட்டு பின் நடைபெறும்.
- 7 க்குரியவர் 7க்கு 8ல் 6ல் சுக்கிரன் ராகு,4-9க்குரியவரின் சேர்க்கை இருப்பின் ஒரு பெண்ணின் தொடர்பு ஏற்பட்டு ,பணத்தை சுருட்டி கொண்டு ஓடி ,அந்த பெண்ணால் கைவிடப்பட்டு, வெறும் கையாக வருவான்,பெண்ணால் சகல சொத்தும் அழியும்.
- 7க்குரியவர் நீச பங்கம் பெற,4க்குரியவர் 7ல் இருக்க ,சந்திரன் 9ல் இருக்க, மனைவியால் சொத்து சுகம் தனம் ஏற்படும்.
விதிகள் தொடரும்…