செவ்வாய் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர பலன்கள்
ஒருவர் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் எந்த நட்சத்திரத்தை பெற்றுள்ளதோ அதன் எதிரிடை நட்சத்திரத்தை பெற்ற லக்கினத்திற்கோ , சந்திரனுக்கோ , லக்கினாதிபதிக்கோ செவ்வாய் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காமல் தடைபடும்.
செவ்வாய் அவரவர் ஜாதகத்தில் எந்த பாவத்தில் உள்ளாரோ அந்த பாவாதிபதி செவ்வாயின் எதிரிடை நட்சத்திரத்தில் இருந்தால் அந்த பாவத்திற்கு செவ்வாய் மூலம் கிடைக்கக் கூடிய பலன்கள் கிடைக்காது.
1.இதன் பலன்கள்: வாகனங்களால் வரும் ஆபத்து, பிரயாணங்களில் ஏற்படும் பயம், அகௌரவம், வீண்பழி, அபவாதம், இரத்தபந்த உறவினர்கள் மூலம் ஏற்படும் கலக்கம்.
2. இதன் பலன்கள்: பல வகையான தொல்லைகள், மறைமுக எதிரிகளால் ஏற்படும் பயம்,வழக்கு, ஆயுள் பயம், கண்டாதி தேஷம்.
3. இதன் பலன்கள்: தொழிலில் பொருள் நஷ்டம்,தொழில் தடை பாதிப்பு , திருட்டு , இரத்தகுறிகள் , இரத்த சம்பந்தமான நோய்தொல்லைகள் , கிலிபீதி பயம் ,
4. இதன் பலன்கள் : ஆயுத பயம், குடும்பத்தில் ஏற்படும் மன கலக்கம், விரக்தி, சண்டை சச்சரவுகளால் ஏற்படும் விஷபயம் , மிருக பயம் , நாய்க்கடி,விஷ ஐந்துக்களால் வரும் ஆபத்து
5. இதன் பலன்கள் : இல்லறம் பாதிப்பு கணவன் மனைவிக்குள்அடிக்கடி பிணக்கு, உடல் உபாதை , எதிரிகளின் தாக்குதலுக்கு உட்படுதல் , சகோதரர் பாதிப்பு ,திடீர் இழப்பு, அவ்வகை மனக்கசப்பு விரோதங்கள் , நிலம் , வீடு வாகன விஷயத்தில் பாதிப்புக்கள்,அவ்வகை பொருள் நஷ்டம் , வழக்கு வியாஜ்ஜிய தொல்லைகள் நிர்வாக பாதிப்பு , அணு ஆயுத பயம்
1 முதல் 5 வரை சொல்லப்பட்ட பலன்கள் செவ்வாய் தசா புத்தி காலங்களிலும் , மிருகசீரம் , சித்திரை – அவிட்ட நட்சத்திரங்கள் வரும் நாட்களிலும் , செவ்வாய் கிழமைகளிலும் , செவ்வாய் ஓரை வரும் நேரங்களிலும் நடக்கும்.
செவ்வாய் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர அட்டவணையை பெற இங்கே சொடுக்கவும்