கிரகம் எந்த சாரத்தில் இருந்தபோதும் அக்கிரகம் யாருடைய வீட்டில் அமைந்துள்ளதோ அக்கிரகத்தின் குணம் தான் பிரதானமாக இருக்கும்.
ஜனன லக்னம் எதுவாக இருந்தாலும் ஜனன லக்னாதிபதி நின்ற இடத்திற்கு 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் லக்னம், சூரியன், சந்திரன் இருப்பதும். 1, 5, 9-ல் சூரியன் சந்திரன் நின்ற வீட்டதிபதி இருப்பது மிகுந்த சிறப்பு.
லக்னாதிபதி நின்ற இடத்திற்கு 1,4, 7,10 ஆகிய இடங்களில் லக்னம், சூரியன், சந்திரன் இருப்பதும். 1,5,9 சூரிய சந்திரன் நின்ற வீட்டதிபதி இருப்பதும் மிகுந்த சிறப்பு.
லக்னாதிபதி நின்ற இடத்திற்கு 1,4,5,7,10ல் அதிக கிரகங்கள் நிற்பது ஜாதக பலத்தை காட்டும்.
லக்னாதிபதிக்கு 6, 8, 12ல் அதிக கிரகங்கள் வரக்கூடாது.
தனித்து நிற்கும் எந்த கிரகமும் பலன்களை தர முடியாது. கிரகங்களின் இணைவின் மூலமே பலன்களை தரும்.
ஒருவரின் லக்னம் நன்கு செயல்பட வேண்டுமானால் நான்காம் பாவாதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும். இதே போல் எந்த ஒரு பாவமும் நன்கு செயல்பட வேண்டும் என்றால் அந்த பாவத்தின் நான்காம் பாவாதிபதி நன்றாக இருக்கவேண்டும்.
சூரியன் உச்சியில் வருகின்ற சமயம் அபிஜித் முகூர்த்தம் முக்கியமான தோஷங்களை இல்லாமல் செய்கிறது.
சூரியன் உதயமும் அஸ்தமனமும் ஆகும் வேளை கோதூளி முகூர்த்தம் ஆகும். இக்காலத்தில் செய்யும் சகல காரியங்களும் சித்தியாகும். இதற்கு திதி- -வாரம்-லக்னம்-விஷ்டிரத்தை- கிரகதோஷம் ஒன்றுமே கிடையாது.
வக்கிரம் பெற்ற கிரகம் மற்றொரு வக்ரம் பெற்ற கிரகத்தோடு கூடியிருக்கும் போது மிக அதிக அளவு பலம் பெறுகிறது. வக்கிரம் பெற்ற கிரகமானது தன்னுடைய உச்ச ராசியில் இருக்கும் போது மத்திம பலன்;சொந்த வீட்டில் பலம் இல்லை; நீச்ச ராசியில் இருப்பின் பலம் அதிகம்.
குரு பாவ கிரகங்களை கெடுதி செய்யும் கிரகங்களை பார்ப்பது நல்ல யோகத்தை தரும் ஆதிபத்தியம் கொண்ட எந்த கிரகத்தையும் குரு நோக்கிடல் கூடாது.
சனி நின்ற வீட்டிற்கு 9, 10-ஆம் பாவாதிபதி அல்லது அப்பாவத்தில் உள்ளவர்கள் சனிக்கு நட்பு, நல்ல ஆதிபத்தியம் பெற்றவராகவும் இருந்துவிட்டால், சனி பார்வையும் அவர் தசா புத்தியும் நல்ல யோகத்தை செய்துவிடுகிறது.
சூரியன் 1, 3 ,6, 10, 11ல் இருப்பது நல்லது. மேஷம- ரிஷபம்-கடகம்-சிம்மம்-விருச்சிகம்-தனுசு போன்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தும்.
1, 2 ,4 ,5, 7,9,10ல் சந்திரன் இருப்பது நல்லது. மேஷம்-மிதுனம்-கடகம்-கன்னி-துலாம்- மீனம் போன்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தும்
வளர்பிறை சந்திரன் 3,7,5,11-ல் இருப்பது வைத்தியன் அவதற்கு சிறப்பான நிலை.
1,6,10,11 இல் செவ்வாய் இருப்பது சிறப்பு. மேஷம்-கடகம்-சிம்மம்-விருச்சிகம்-தனுசு-மீனம் போன்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தும்.
1,4,5,7,9,10ல் புதன் இருப்பது சிறப்பு. ரிஷபம்- மிதுனம்-சிம்மம்-கன்னி-துலாம்- மகரம்-கும்பம் போன்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தும்
4,7,10,5,9,2,11ல் குரு இருப்பது நல்லது. மேஷம்-கடகம்-விருச்சிகம்-கும்பம்-மீனம் போன்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தும்.
1,4,7,5,9,10-ல் சுக்கிரன் இருப்பது சிறப்பு. ரிஷபம்-மிதுனம்-கன்னி-துலாம்-மகரம் கும்பம் போன்ற லக்னங்களில் பிறந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தும்.
3, 6,9, 11 இல் சனி இருப்பது நல்லது. மிதுனம்-கன்னி-துலாம்-விருச்சிகம்-தனுசு -மகரம்-கும்பம் போன்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தும்
1 ,4 ,9 ,11 இல் கேது இருப்பது நல்லது. மேஷம்-மிதுனம்-கடகம்-துலாம்-விருச்சிகம் -மகரம்-மீனம் போன்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தும்.
1 4 7 பத்தில் ராகு இருப்பது நல்லது கேது அமர்ந்த வீட்டின் அதிபதியை பொறுத்து யோகம் நடக்கும்