திருக்கண்ணபுரம்
திவ்யதேசம் -17
நாகப்பட்டினத்திலிருந்து நன்னிலம் செல்லும் வழியில் நன்னிலத்திற்கு கிழக்கே எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் கிருஷ்ணாரணய க்ஷேத்ரம் பஞ்ச கிருஷ்ணா க்ஷேத்ரம் , ஸப்த புண்ணிய க்ஷேத்ரம் என்னும் புனிதமான ஸ்தலம் இருக்கிறது. இதைத் திருக்கண்ணபுரம் என்று புராணங்கள் கூறுகின்றன !
வடக்கே திருமலைராயனாறு , தெற்கே வெட்டாறு இந்த இரண்டிற்குமிடையே கிழக்கு மேற்காக 316 அடி நீளம் 216 அடி அகலம் வடக்கு தெற்காக 95 அடி உயர கோபுரம் 7 நிலை கொண்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது.
- மூலவர் ஸ்ரீ நீலமேகப் பெருமாள் நின்ற திருக்கோலம்.
- தாயார் கண்ணபுர நாயகி ( ஸ்ரீதேவி , பூதேவி , ஆண்டாள் , பத்மினி என்ற பெயரும் உண்டு )
- கோவிலுக்கு எதிரில் பெரிய புஷ்கரணி இந்த நித்ய புஷ்கரணி 450 அடி நீளம் 415 அடி அகலம் ஒன்பது படித்துறை கொண்டது.
- உற்சவர் சௌரிராஜப் பெருமாள்.
- விமானம் உத்பலா வதக விமானம்
பஞ்சகிருஷ்ண ஸ்தலங்களில் இதுவும் ஒன்று பெருமாள் எல்லா அக்ஷரங்களிலும் இந்த ஸ்தலத்தில் ஸாந் நித்யம் செய்கிறபடியால் இந்த ஸ்தலம் ஸ்ரீமதஷ்டா க்ஷர மகா மந்திர ஸித்தி க்ஷேத்ரம் என்று புராணங்களில் சொல்லப்படுகிறது.
திருவரங்க ஸ்தலம் மேலை வீடு. இந்த ஸ்தலம் கீழை வீடு என்று உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது. அபய ஹஸ்தத்திற்குப் பதிலாக வரதஹஸ்தம் காணப்படுகிறது. உற்சவர்,கன்யகாதானம் வாங்க கையேந்திய நிலையில் சேவை சாதிக்கிறார். விபிஷணனுக்கு ஸ்ரீரங்கநாதர் அருளியபடி அமாவாசைத் தினத்தன்று இறைவன் நடை அழகை சேவை சாதித்த ஸ்தலம். விபீஷணனுக்குத் தனிச்சன்னதி உண்டு.
உபரி சரவசு மன்னன் புத்திரபேறு வேண்டி இந்த ஸ்தலத்தில் தவம் செய்து பத்மினி என்ற அழகானப் பெண் குழந்தைக்கு தந்தையானதால் பத்மினி,இத்தலப் பெருமானே தனக்குக் கணவனாக வரவேண்டும் என்று விரும்பியதால் சௌரிராஜப் பெருமாளே பத்மினியை மணந்து கொண்டார்.
சோழ மன்னர் ஒருவர்,ஒருநாள் இந்த பெருமாளுக்குச் சூட்டிய மாலையில் தலைமுடி இருப்பதைக் கண்டு கோயில் அர்ச்சகரிடம் கேட்சு இது பெருமாளின் தலைமுடிதான் என்று அர்ச்சகர் பதில் சொன்னார் . இதை நம்ப மறுத்த அரசன் , கருவறைக்குச் சென்று பெருமாளைப் பார்த்தான் . பெருமாள் தலையில் முடி இருந்தது . அது உண்மையான முடிதானா என்று சந்தேகப்பட்டு , அரசன் அந்த தலைமுடியை இழுக்க பெருமாள் தலையிலிருந்து இரத்தம் வந்தது . அரசன் இதைக்கண்டு அதிர்ந்து பெருமாளிடம் மன்னிப்புக் கேட்டான். பெருமாளும் தன் தலைமுடியை வளர்த்து அரசனுக்கு காண்பித்து அரசனது சந்தேகத்தைப் போக்கி மன்னித்து அருளினார். இதனால் உத்ஸவப் பெருமாளுக்கு ‘ சௌரி ராஜன் என்ற திருப்பெயரும் உண்டு.
முனையத்தரையன் என்ற பக்தர் தனது மனைவி சமைத்தப் பொங்கலை அர்த்தசாமத்திற்குப் பின்பு கோயிலுக்கு எடுத்துச் சென்று பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய நினைத்தார் . பகவானும் பக்தனின் வேண்டுகோளை ஏற்று , மூடிய கோயில்கதவைத் திறந்து மணியோசை அடித்து வெண் பொங்கலை நைவேத்தியமாக ஏற்றுக் கொண்டார். இன்றைக்கும் இந்த பெருமாளுக்கு அர்த்த சாமத்தில் முனியைத் தரையர் நினைவாக ‘ முனியோதரம் பொங்கல் சமர்பிக்கப்படுகிறது.
இக்கோயிலுக்கு தனியே சொர்க்க வாசல் இல்லை. வீகடாக்ஷன் என்றும் அசுரனை பெருமாள் வதம் செய்த இடம். பெரியாழ்வார் , ஆண்டாள் . குலசேகர ஆழ்வார் . திருமங்கையாழ்வார் , நம்மாழ்வார் ஆகியோர் இங்கு மங்களாசாஸனம் செய்திருக்கிறார்கள்.
பரிகாரம் :
தினமும் சந்திக்கும் கொடூரமானப் பிரச்சனைகளிடமிருந்து விலகவும் மந்திரங்களாலும் தந்திரங்களாலும் துன்பப்படும் அனைவரும் அதிலிருந்து விலகவும் இங்கு வந்து.புஷ்கரணியில் பெருமாளை சேவித்து முனித்தரையப் பொங்கலை நைவேத்தியம் செய்து உண்டால் இடர்பாடுகள் நீங்கி , வாழ்க்கையில் அனைத்து சௌபாக்கியங்களையும் பெறுவார்கள்.
வழித்தடம் :