பத்திர யோகம்
யோகநிலை
லக்னத்திற்காவது, சந்திரனுக்காவது கல்விக்கும், அறிவிக்கும் அதிபதியான புதன் ஆட்சியிலாவது, உச்சத்திலாவது கேந்திரத்தில் இருந்து சுபர் பார்வை பெற்றால் அது பத்திர யோகம் ஆகும்.
பலன்
பத்திரயோகத்தில் பிறந்தவன் தூய்மையானவன்; வித்வான்களால் புகழடைந்தவன், அரசனுக்கு சமமானவன், அதிவிபரம் உள்ளவன், அரசன் சபையில் திறமைசாலி எனும் பெயர் எடுத்தவன் என்க.
யோக பங்கம்
புதன் லக்னத்திற்கு பாவியாகி கேந்திரத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெரினும் 6, 8 ,12 -க்குரிய கிரகங்களால் பார்க்கப்பட்டால் யோகம் இல்லை.
பத்திர யோக உதாரணம்
பத்திர யோகநிலை
லக்னத்திற்கு கேந்திரத்தில் புதன் ஆட்சி உச்சம் பெறுவதால் பத்திர யோகம் ஏற்படும். புதன் யோகத்தை தருவான்.
பத்திர யோக பங்கம்
புதன் லக்னத்திற்கு கேந்திரத்தில் ஆட்சி பலம் பெறினும், லக்கினத்திற்கு பாதகாதிபதியாகி சனி பார்வை பெறுவதால் பத்திர யோகபங்கம் ஏற்படும் புதன் யோகத்தை தரான்.
முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் தான் கற்ற கல்வியை தன் சிஷ்யனுக்கு ஐயமர முழுவதும் போதித்ததால் பத்திர யோகம் ஏற்படும்.
தான் கற்ற கல்வியை மற்றவருக்கு போதிக்காமல் இறந்தால் அவன் கல்வி அவனோடு அழிந்து வீணாகி பத்திர யோக பங்கம் ஏற்படும்.