சித்திரை
இந்த மாதத்தில் வருகிற பிரதோஷ நாட்களில் நீர்மோரும், தயிர் சாதமும் இறைவனுக்கு நிவேதனம் செய்து, நிவேதிக்கப்பட்ட நீர் மோரையும், தயிர் சாதத்தையும் விளை யாட்டுப் பிள்ளைகளுக்குத் தானம் செய்ய வேண்டும்.
இதன் வழியாக, பவுத்திரம், சூடு, எலும்புருக்கி போன்ற நோய்கள் நீங்கும்.
வைகாசி
பாலையும், சர்க்கரைப் பொங்கலையும் இறைவனுக்கு நிவேதித்துப் பின் தானம் செய்ய வேண்டும்.
இதன் வழியாக வயிறு தொடர்புடைய அனைத்து நோய்களும் நம்மை விட்டு அகன்றுவிடும்
ஆனி
தேனும் திணைமாவும் கொண்டு ஈசனார்க்கு நிவேதனம் செய்யப்பட வேண்டும். இதன் வழியாக மலட்டுத்தன்மை நீங்கும்
ஆடி
வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து அதை எம்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து பின்தானம் செய்ய வேண்டும்.
இதன் வழியாக, கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.
ஆவணி
தயிரன்னம் நிவேதிக்கப்பட்டுத் தானம் செய்ய வேண்டும்.
இதன் வழியாக, காரியத்தடைகள் நீங்கும். நோய் வாய்ப்பட்டவர் அந்நோயினின்று மீண்டு சுகம் பெறுவர்.
புரட்டாசி
சர்க்கரைப் பொங்கலும், புளியோதரையும் நிவேதிக்கப்பட்டுத் தானம் புரிதல் வேண்டும்.
இதன் வழியாக, அரிப்பு, தடிப்பு, ஊரல், விஷக்கடி போன்ற தொல்லைகள் நீங்கும்.
ஐப்பசி
உளுந்து வடையும், இனிப்புப் பண்டமும் இறைவனுக்கு நிவேதிக்கப்பட்டுத் தானம் செய்தல் வேண்டும்.
இதன் வழியாக, சீதள நோய் விலகும்.
கார்த்திகை
எலுமிச்சைச் சாதமும், தேங்காய்ச் சாதமும் இறைவனுக்கு நிவேதிக்கப்பட்டுத் தானம் செய்திடல் வேண்டும்.
இதன் வழியாக, பெண்களுக்குரிய கர்ப்ப சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் அடி வயிற்றில் இருந்து தொடைப் பகுதி வரையிலான நோய்கள் நீங்கும்.
மார்கழி
வெண் பொங்கலும், கடலைச் சுண்டலும் இறைவனுக்கு நிவேதனம் செய்து தானம்
செய்யப்பட வேண்டும். இதன் வழியாக மஞ்சள்காமாலை ஆஸ்துமா போன்ற நோய்கள் விலகும்.
தை
தயிர் ஏட்டில் தேன் சொரிந்து இறைவனுக்கு நிவேதிக்கப்பட்டுத் தானம் அளிக்கப்பட வேண்டும்.
இதன் வழியாக வியாதிகள் நீங்கும்.
மாசி
நெய்யுடன் கலந்து ஈசனார்க்கு நிவேதிக்கப் பட்டுத் தானம் செய்ய வேண்டும்
இதன வழியாக மாந்தம் வயிறு உப்புசம். சிறுநீரகக் கோளாறு ஆகியன தீரும்.
பங்குனி
தேங்காய்ச் சாதமும் தக்காளிச் சாதமும் பெருமானுக்கு நிவேதிக்கப்பட்டுத் தானம் செய்ய வேண்டும்.
இதம் வழியாகபித்தி எயத்தியம் முதலிய நோய்கள் நீங்கும்