லக்னமும் அசுப கிரக சம்பந்தமும்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

லக்னமும் அசுப கிரக சம்பந்தமும்

லக்னம் + சூரியன் :

சூரியன் அசுபராகி லக்ன சம்பந்தம் பெற்றால் , ஜாதகர்கள் நல்ல கண் பார்வைக்கும் , கம்பீரமான தோற்றத்திற்கும் சரிப்பட மாட்டார்கள் இவர்கள் சென்னை காஞ்சிபுரம் வழி மதுரமங்கலம் சென்று வழிபடவேண்டும் . ஞாயிறுதோறும் சூரிய காயத்ரி பாராயணம் செய்வது நன்று.

லக்னம் + சந்திரன் :

சந்திரன் கெட்டு லக்ன தொடர்புபெற . ஜாதகர் ஆரோக்கியத்திற்கு சரிப்பட்டு வரமாட்டார். அவ்வப்போது திருப்பதி சென்று வழிபடுவது சிறப்பு.

லக்னம் + செவ்வாய் :

செவ்வாய் அசுபத் தன்மை பெற்று லக்னத்தைத் தொட அமைதியான – சாத்வீக வாழ்க்கைக்கு சரிப்பட்டு வரமாட்டார். அடிக்கடி பழனி சென்று வழிபடுவது நல்லது.

லக்னம் + புதன் : புதன் கெட்டு லக்னம் மேவிட , நல்ல ஞாபக சக்திக்கும் புத்திக்கூர்மைக்கும் சரிப்பட்டு வரமாட்டார்.திருவெண்காடு சென்று வழிபடவும்.

லக்னமும் அசுப கிரக சம்பந்தமும்

லக்னம் + குரு :

குரு அசுபராகி லக்னம் ஏறிட , பெருந்தன்மையான செயல்களுக்கு ஜாதகர் சரிப்பட்டு வரமாட்டார் ஆலங்குடி சென்று வணங்கவேண்டும் . வியாழக்கிழமை விரதம் நன்று

லக்னம் + சுக்கிரன் :

சுக்கிரன் கெடுநிலை பெற்று லக்ன சம்பந்த . பெற , ஜாதகர் அழகுபடுத்திக்கொள்ள சரிப்பட மாட்டார் கும்பகோணம் கஞ்சனூர் சென்று வழிபடவும்.

லக்னம் + சனி :
சனி லக்னத்தைத் தொட , ஜாதகர் சுறுசுறுப்புக்கு சரிப்பட மாட்டார் திருநள்ளாறு சென்று வணங்கவேண்டும் .

ராகு- கேதுக்கள் ஜாதகத்தில் எந்த வீட்டில் இருப்பினும் அந்த பாவகம் சம்பந்தப்பட்ட செயலுக்கு ஜாதகர் சரிப்பட மாட்டார் என தெளிவாகக் கூறிவிடலாம் . எனவே ராகு கேதுவைப் பற்றி குறிப்பிடவில்லை . ஏனெனில் மற்ற கிரகங்கள் சுப- அசுபத் தன்மை பெறும் வாய்ப்புள்ளவை . ஆனால் ராகு கேது அசுபத் தன்மை மட்டும் உடையவர்கள்.

தங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடைய Youtube Channel Subscribe செய்து ஆதரவு தாருங்கள் …

Leave a Comment

error: Content is protected !!