குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 விருச்சிகம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

குரு பெயர்ச்சி பலன்கள் (Guru Peyarchi Palangal) – விருச்சிகம்

சித்திரை மாதம் 9ம் தேதி (22.04.2023) சனிக்கிழமை, உதயாதி நாழிகை 43:30 அதாவது இரவு 11: 27 மணிக்கு ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம் மீன ராசியில் இருந்து அஸ்வினி நட்சத்திரம் 1ம் பாதம் மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பெயர்ச்சி கிரக நிலைகள் -2023

செவ்வாய் பகவானின் அருள் பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே!!! வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 2 மற்றும் 5-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு நோய் -கடன் -எதிரி ஸ்தானமான 6-வது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே தொழில் (10-மிடம் ) குடும்பம் ,வாக்கு (2-மிடம்) விரயம் -தூக்கம் (12மிடம்) ஸ்தானங்களில் பதியும்.

ஐந்தாம் இடத்தில் இருந்து நற்பலன்களை வழங்கி வந்த குருபகவான் தற்பொழுது ஆறாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். குரு ஆறில் சஞ்சரிக்கும் காலத்தில் தேவையற்ற விரோதங்கள், மனக்கசப்புகள், எதிர்ப்புகள் உருவாகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள், பணக்கஷ்டம். இடம் விட்டு இடம் செல்லும் அமைப்பு, பகைவர் மற்றும் கடன்காரர்களால் அதிக தொல்லைகள், எதிர்பார்த்த பண வரவுகளில் தடை, வம்பு வழக்கில் ஈடுபட வேண்டிய நிலைகள் உருவாகும்.

ஜாதகத்தில் ஆறாம் இடம் என்பது நோய்களை குறிப்பிடும். ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் பாவகம் சுத்தமாக இருந்தால் அந்த நபருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். சின்ன சின்ன காய்ச்சல்கள், ஜலதோஷம், வாயு பிரச்சனை தவிர பெரிய அளவில் நோய்கள் வராது. கண்டறியப்படக்கூடிய வியாதிகள் மட்டுமே உருவாகும். மருந்துகளால் நிரந்தரமான தீர்வு கிடைக்கும். சுய ஜாதகம் பலம் பெற்றிருந்தாலும் குருவின் பலம் நன்றாக இருந்தாலும் இந்த குரு பெயர்ச்சியின் தாக்கம் பெரிய அளவில் இருக்காது.

விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பாகவே குறும்புத்தனம் மிக்கவர்களாக இருப்பார்கள். பிடிவாத குணம் அதிகமாக கொண்டவர்கள். எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். எதையும் விடாப்பிடியாக நின்று சாதிப்பார்கள். இவர்களுக்கு சேமிப்பில் அதிக அக்கறை இருக்கும். யாருடைய பணமாவது இவர் கையில் புழங்கிக் கொண்டே இருக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள்

குருவின் பார்வை பலன்கள்

குரு பகவான் ஐந்தாம் பார்வையாக பத்தாம் இடத்தை பார்ப்பதால் தொழில் வருமானம் நன்றாக இருக்கும். புதிய தொழில் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும். தொழில் விரிவாக்கம் செய்யலாம். புதிய வியாபாரத்தில் யுக்திகளை கையாளுவீர்கள். 

குரு பகவான் ஏழாம் பார்வையாக 12-ம் வீட்டை பார்ப்பதால் வீண் விரயங்கள் தவிர்க்கப்படும். வெளிநாடு யோகம் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவீர்கள். மனைவி, பிள்ளைகளின் பெயரில் சொத்துக்கள் வாங்குவது சிறப்பு. சுப விரயங்களால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

குரு பகவான் 9 ஆம் பார்வையாக இரண்டாம் இடமான தனஸ்தானத்தை பார்ப்பதால் பண வருவாய் நன்றாக இருக்கும். முதலீடுகள் செய்யலாம். பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். தனது குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணம் சேமிப்பில் நாட்டம் உண்டாகும். ஆபரண சேர்க்கை உண்டாகும். சிலருக்கு வீடு கட்டும் நிலை வரும்.

குரு பெயர்ச்சி பலன்கள்

பலன் தரும் பரிகாரம்

வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை முருகன் கோயில்களில் இருக்கும் நவகிரக சன்னதிக்கு சென்று செவ்வாய் பகவானுக்கு அர்ச்சனை செய்து, முருகப்பெருமானை வழிபாடு செய்து வாருங்கள். ஒரு முறை திருச்செந்தூர் சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.

Leave a Comment

error: Content is protected !!