சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023 – கும்பம்
ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது.
சனி பகவானின் அருள் பெற்ற கும்ப ராசி அன்பர்களே !!! சித்திரை 8-ம் தேதி முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். வருடம் முழுவதும் சனிபகவான் ஜென்ம சனி ஆக உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார். ராகு-கேதுக்கள் முறையே ஐப்பசி 13-ம் தேதி முதல் 3 மற்றும் 9-ம் இடங்களிலும், பிறகு 2 மற்றும்8-ம் இடங்களிலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் தாமதமாகவே நடக்கும். பிடிவாதமாக காரியங்களை செய்து கஷ்டப்பட்டு வெற்றியும் பெறுவீர்கள். கூட்டுக் குடும்பத்தை விட்டு தனி குடித்தனம் செல்ல வேண்டி இருக்கும். தாய் தந்தையரின் ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் நீங்கும். இளைய மூத்த சகோதரர்களுக்கு நன்மை உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு இடம் மாற்றம் உண்டு. கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் விலகும்.
மாணவர்கள் மிகவும் கடினமாக உழைத்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். ஐப்பசி 13-ம் தேதிக்கு பிறகு வெளிநாடு செல்ல விரும்புவோர்களுக்கு வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. வியாபாரிகளுக்கு பணம் வசூலில் தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைத்து நல்ல புகழையும் பெயரையும் பெறுவார்கள்.
பலன் தரும் பரிகாரம்
சித்திரை மாதத்தில் உங்கள் பிறந்த நட்சத்திர நாளில் குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து பூஜை செய்யவும், சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமும், ஆஞ்சநேயருக்கு நெய் தீபமும் வைத்து வழிபட்டு வர இந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களை பெற முடியும்.