சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023 – மீனம்
ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது.
குரு பகவானின் அருள் பெற்ற மீன ராசி அன்பர்களே !!!இந்த வருடம் உங்கள் ராசிநாதன் குரு பகவான் சித்திரை 8-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 12-ம் இடம் ஏழரை சனியாக சனிபகவான் சஞ்சாரம் செய்கிறார். ராகு கேதுக்கள் முறையை ஐப்பசி 13-ம் தேதி வரை உங்கள் ராசிக்கு 2 மற்றும் 8மிடத்திலும், பிறகு 1 மற்றும் 7-ம் இடங்களிலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
இந்த வருடம் திருமணமாகாதவர்களுக்கு நிச்சயம் திருமணம் நடக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். குழந்தைகளின் முன்னேற்றம் நன்றாக இருக்கும். குழந்தைகளால் தன லாபம் உண்டு. விரயச் சனி ஆட்சி பலத்துடன் இருப்பதால் சுப விரயத்தையே செய்வார். தொழில் துறையில் அலைச்சல் மிக அதிகமாக இருக்கும். அதற்குரிய முன்னேற்றமும் உண்டு.
வீடு, மனை,வாகனம், புது தங்க, வெள்ளி ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்க பெறுவார்கள். இந்த வருடம் வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு நிச்சயம் உண்டு. கிரகப்பிரவேசம் செய்வீர்கள். பெண்களுக்கு நல்ல ஏற்றம் தரும் ஆண்டாக இந்த வருடம் இருக்கும். விவசாயிகள் நல்ல மகசூல் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மூலம் இடப்பெயர்ச்சி கிடைக்க பெறுவீர்கள்.
ஆரோக்கியத்தில் உள்ள குறைபாடுகள் நீங்கும். உடல் நோய்களுக்கு நல்ல மருத்துவம் கிடைக்கும். மொத்தத்தில் இந்த வருடம் சிறப்பான ஆண்டாகவே இருக்கும்.
பலன் தரும் பரிகாரம்
வாரம் தோறும் சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமும், ஆஞ்சநேயருக்கு நெய் தீபமும் ஏற்றி வழிபட்டு வரசகல நன்மைகளும் கிடைக்கும் வருடமாக இந்த வருடம் இருக்கும்.