கருங்காலி
சமீபகாலமாக திரை நட்சத்திரங்கள் அரசியல் பிரபலங்கள் என பலரும் ‘கருங்காலி‘ மாலைகள் அணிகிறார்கள். ‘கருங்காலி மாலை’ அணிந்தால் அதிர்ஷ்டம் சேரும். தீய சக்திகள் விலகும் என்பதாலேயே பிரபலங்கள் கருங்காலி மாலைகள் அணிகிறார்கள் என்று பரவலாக சொல்லப்படுகிறது.
இதைக் காணும் இளைஞர்கள் பலரும் ‘கருங்காலி மாலை’ அணிய தொடங்கி இருக்கிறார்கள். இவ்வாறு கருங்காலி மாலைகள் அனைவரும் அணிவது அதிஷ்டம் தருமா? கருங்காலி பற்றிய உண்மைகள் என்னென்ன? என்பன குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
கருங்காலி என்றால் என்ன?
கருங்காலி அணிந்து கொள்வது நன்மையா தீமையா என்பதை அறிவதற்கு முன்பாக கருங்காலி என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம். கருங்காலி இயல்பாகவே வறட்சியை தாங்கி வளரும் ஒரு தாவரம். கருங்காலி மரங்களின் பூர்வீகம் வெப்பம் மிகுந்த ஆப்பிரிக்க காடுகள் என்கிறார்கள். இந்த மரமானது கார்பன் எனப்படும் கரித்தன்மையை தன்னில் சேமிக்கும் தன்மை கொண்டதாகும்.
இப்படி சேமிக்கப்பட்ட கரித்தன்மையானது மரத்தண்டாகி பிற்காலத்தில் உறுதியான வைரம் பாய்ந்த மரமாகிறது என்று சொல்வார்கள். இயற்கையின் சக்தியை தன்னுள் உள்வாங்கி வளரும் இந்த மரம் சரியாக பயன்படுத்தும் போது தான் இருக்கும் இடத்தைச் சுற்றிலும் நல்ல கதிராற்றலை பரப்பும் தன்மை கொண்டது என்பார்கள்.
அதிர்ஷ்டம் தருமா கருங்காலி ?
இன்றைக்கு கருங்காலி சம்பந்தப்பட்ட பொருள்களை அணிந்தாலே, கையில் வைத்திருந்தாலோ செல்வம் சேரும், நோய்கள் தீர்ந்துவிடும், குழந்தை பேரு உண்டாகும், பூர்வ ஜென்ம வினைகள் தீரும் என்றெல்லாம் பல அதீதமான கற்பனை புனைவுகள் உலவுகின்றன. மேலும் சமூகத்தில் பிரபலமாக உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் ஒரு விஷயத்தை பயன்படுத்தும் போது அதையே நாமும் பின்பற்றினால் நாமும் அவர்களைப் போல உயர்ந்திடலாம் என்ற மனப்பான்மையும் பலரிடம் உள்ளது.
உலகில் ஒவ்வொருவரும் தனித்தன்மையான கிரக நிலைகள் உள்ள காலகட்டங்களில் பிறந்திருக்கின்றனர். அவரவர் பிராப்தம் என்பது அவரவர் ஜாதக நிலையை பொறுத்து அமையும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
சந்திர தன்மை விலகும்!
வெப்பத்தை உருவாக்கும் கருங்காலிகளை முறையற்ற நிலையில் எல்லோரும் பயன்படுத்தக் கூடாது. அதனால் நமக்குள் இருக்கும் சந்திரத்தன்மை அற்றுப் போய்விடும். சந்திரன்-மனோ காரகன் ஆக மாலை, கை கங்கணம் என்ற ரீதியில் முறையற்ற வகையில் கருங்காலிகளை பயன்படுத்த வீண் மன சஞ்சலங்கள், மனரீதியான கலக்கங்கள் வர வாய்ப்பு உண்டு என்பது பெரியோர்களின் வழிகாட்டல்.
உயிரற்ற கட்டைகளை கடைந்து செய்யும் பொருள்களுக்கு தெய்வத்தன்மை இல்லை என்பது அவர்களின் கருத்து. ‘எனில் ருத்ராட்ச மாலை தெய்வத்தன்மை எப்படி?’ என்று சிலர் கேட்கலாம் ருத்ராட்சம் என்பது ஒரு பழத்தின் நிறைவு நிலையான உயிர் தன்மையுடைய ஒரு கனியின் உயிர் மூலம் உள்ள விதை எனவே அதற்குள் உயிர் தன்மை உறைந்திருப்பதால் அது நீங்காத தெய்வீகத் தன்மையுடன் திகழ்கிறது எனலாம்.
அதிர்ஷ்டம் எப்போது கிட்டும் ?
அதிர்ஷ்டம் யோகம் கூடி வரவேண்டும் என்பதற்காக அன்பர்கள் சிலர் கருங்காலி மாலை அணிவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். ‘உழைக்காமல் கிடைக்கும் பெரிய லாபம் அதிர்ஷ்டம்’ என்று கருதினால் அது தவறு. சரியான கால நேரம் பொருந்தி வர உங்களின் சிறிய முயற்சிகளும் பெரிய பலன் கிடைக்கும். உங்களின் பிராப்தத்தால் கிடைக்கும் வெகுமதி அது. மற்றபடி ஏதோ ஒரு பொருளை அணிவதால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது தவறு.
ஆகவே யார் யாருக்கு எல்லாம் ஜாதகப்படி கருங்காலி மரத்தின் பயன்பாடு யோக பலனை செய்யக் கூடியதாய் இருக்கும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப பயன்படுத்தினால் அவர்களுக்கே காரியங்களில் கூடுதலான ஒரு உத்வேகம் கிடைக்கும். அந்த உத்வேகம் வெற்றியை நோக்கி இட்டு செல்லும் அவ்வளவே.
எனவே ஒவ்வொருவரும் அவரவர் நட்சத்திரத்திற்குரிய விருச்சங்களை அறிந்து அதை வணங்குவது சிறப்பு. அவற்றில் செய்யப்பட்ட பொருள்களை ஏதேனும் ஒரு வகையில் பயன்படுத்த விரும்பினால் அதற்கு ஜோதிடர்களின் வழிகாட்டுதலை நாடலாம். மற்றபடி ஆலயங்களுக்கு செல்லும்போது அங்கே தெய்வ சாந்தியுடன் திகழும் விருச்சங்களை வணங்கி வழிபட்டு வாருங்கள் சகல நன்மைகளும் உண்டாகும்.
கருங்காலி யார் அணியலாம்
செவ்வாய் யோகம் தரும் நிலையில் ஒருவருக்கு இருந்து அவர் கருங்காலி மாலையை அணிந்தால் யோகப்பலனை அந்த நபருக்கு அதிகப்படுத்தும்.
யாருக்கெல்லாம் கருங்காலி மாலை பணம் தரும்,தொழில் தரும்,புகழ் தரும்,உதவி தரும்,ஆரோக்கியம் தரும்,சொத்து தரும்வழக்கில் வெற்றி தரும் என்று சொல்கிறேன்
கீழ் கண்ட நட்சத்திரங்கள் மேற்கண்ட பலன்களைத் தரும்
திருவாதிரை,சதயம்,ஸ்வாதி,புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி,ரோஹிணி,ஹஸ்தம், திருவோணம்,ரேவதி,கேட்டை,ஆயில்யம்,பரணி,பூரம்,பூராடம்,மிருகசீரிடம்.
இவர்கள் கருங்காலி பொருட்கள் பயன்படுத்தி வர அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.
மேலும் மேஷம் ராசி, விருச்சிகம் ராசி, செவ்வாய்க்கிழமை அன்று பிறந்தவர்களுக்கும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்கள். கருங்காலி மணி மாலை, Bracelet, கருங்காலி கோல் , ஆகியவற்றை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கருங்காலி மாலையை பொதுவாக எல்லோரும் உபயோகப்படுத்தலாம். அதனால் அவர்களுக்கு 10 சதவீத நன்மையே கிடைக்கும்.
கருங்காலி மாலையை மிருகசீரிஷம் நட்சத்திரம் ஒருவருக்கு ராசி, நட்சத்திரம் அல்லது லக்ன நட்சத்திரமாக வரும் பட்சத்தில் அவர்கள் உபயோகப்படுத்தும் பொழுது 30 சதவீதம் நன்மை கிடைக்கும்.
ஒருவருக்கு கருங்காலி மாலையால் 100% நன்மை கிடைக்க வேண்டும் என்றால், அவருடைய ஜாதகத்தில் மிருகசீஷ நட்சத்திரத்தின் தொடர்பு நல்ல தொடர்புபாக தொடர்பு கொண்டால் மட்டுமே அவர்களுக்கு அதனால் முழு நன்மை கிடைக்கும்.
கருங்காலி மாலை யார் அணிய கூடாது
செவ்வாய் கிரகம் மூலம் ஒருவர் துன்பப்படுவார் என்று அவருடைய ஜாதக அமைப்பில் இருந்தால் அவர் கருங்காலி மாலையை அணியக்கூடாது.
சில விதிகளை காண்போம்.
செவ்வாய்+சனி
ஓருவரின் பிறந்தகால ஜாதகத்தில் செவ்வாயுடன் பகை கிரகமான சனி இணையும் போது விபத்து,வெட்டு காயம் போன்ற அசம்பாவிதம் ஏற்படுவது இயல்பு. இந்த இணைவு கொண்ட நபர் கருங்காலி மாலையை அணிந்து செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தை அதிகம் பெற்றமையால் திடீர் விபத்து,அடிபடுதல்,உயிர் இழப்பு போன்றவற்றை செவ்வாய் கிரகம் மிக வேகமாக கொடுரமாக தன்னுடைய தசா புத்தி அந்தரத்தில் ஏற்படுத்தும்.
லக்னத்துக்கு 6ல் செவ்வாய்:
கடன்,வழக்கு,சண்டை போன்றவற்றை செவ்வாய் கிரகம் தன் தசாவில் புத்தியில் தரும்.அதே போல் லக்னத்திற்கு ஆறுக்கு உடையவனாக செவ்வாய் இருந்தாலும் மேற்கண்ட அசுப பலன் ஏற்பட்டே தீரும்.இந்த அமைப்பு கொண்ட நபர் கருங்காலி மாலையை அணிந்து செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் அதிகம் பெற்றால் அதீத கடன்,தீரா நோய்,தீரா வழக்கு சண்டைவரும்.
பாதக ஸ்தானத்தில் செவ்வாய்:
பாதக ஸ்தானத்தில் செவ்வாய் நின்று தசாவே புத்தியோ நிகழ்த்தும் போது பாதகமான விளைவுகள் அந்த ஜாதகருக்கு ஏற்படும். பாதக ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்த நபர் கருங்காலி மாலை அணிந்து இருந்தால் அவருக்கு அந்த காலத்தில் நடைபெற உள்ள பாதக செயல்கள் இரட்டிப்பு அடையும்.
செவ்வாய் அவ யோக கிரகமாக இருந்தால் கருங்காலி அணிந்தால் அவயோகத்தை அதிகப்படுத்தும்.
சனி தசா புத்தி அந்தரம் நடப்பவர்கள்,மகர கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள்,ராகு தசா புத்தி அந்தரம் நடைமுறையில் உள்ளவருக்கு
மனக்குழப்பம்,காரியத்தடை,வீண் சண்டை,வாகன விபத்து,கீழே விழுந்து அடிபடல்,மரணம்போன்றவற்றை அவரவர் ஜாதக அமைப்பு படி ஏற்படுத்தும்.மிக கொடுரமாக அது இருக்கும்.