கடன் நிவர்த்தியாக நட்சத்திர பரிகாரங்கள் !

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

நட்சத்திர பரிகாரங்கள்

நட்சத்திர பரிகாரங்கள்

அஸ்வினி: இவர்கள் MONEY PLANT, செடி வளர்க்க வேண்டும்.

பரணி: ஆஞ்சனேயரை பார்க்க வேண்டும். (வணங்க வேண்டாம்)

கிருத்திகை: அவல், பொரி யாருக்காவது அடிக்கடி தானம் செய்யவும்.

ரோகிணி: உடல் ஊனமுற்றவர்களுக்கு செப்பல் வாங்கி தரவும்.

மிருகசீரிஷம்: அரசியலில் இருப்பவர்களிடம் நட்பு வைத்துக் கொள்ளவேண்டும்.

திருவாதிரை: பிரதோஷம் அன்று சிவபெருமானுக்கு வில்வமாலை சாற்றி வழிபடவும்.

புனர்பூசம்: மாரியம்மன் கோவிலுக்கு வெள்ளிகிழமை வாரவாரம் தவராமல் சென்று கூழ் ஊற்றி வரவும்.

பூசம்: ஏழை, எளியவருக்கு, முதியவருக்கு போர்வை வாங்கி தானமாக தரவும்.

ஆயில்யம்: பெருமாளுக்கு சர்க்கரை பொங்கல் நெய்வேத்யம் செய்து வரவும்.

மகம்: சனிக்கிழமை அன்று வாரவாரம் திருநங்கைகளுக்கு அன்னதானம் தரவும்.

பூரம்: வீட்டுபக்கத்தில் CYCLE SHOP வைத்திருப்பவருக்கு வாரம் ஒரு நாள் “டீ’ வாங்கி தரவும்.

உத்திரம்; விதவை பெண்களுக்கு ஏதாவது தானமாக வாங்கி தரவும்.

ஹஸ்தம்: வாரவாரம் சனிக்கிழமை அன்று துளசிமாலை வாங்கி பெருமாளுக்கு சாற்றி வழிபடவும்.

சித்திரை: இரவு ஒரு சொம்பு நீர் மூடிவைத்து விட்டு தினமும் காலை அருந்தி வரவும். யோக நரசிம்மர் ஆலயம் சனிக்கிழமை சென்று வரவும்.

சுவாதி: ஸ்ரீரங்கம் சென்று வழிபாடு செய்தால் கடன் சுமை குறையும்.

விசாகம்: (கடன் வாங்கமாட்டார்) ஆலங்குடி குருபகவான் தரிசணம் செய்ய வேண்டும்.

அனுஷம்: வீடு கட்ட கடன் வாங்குவார்கள், திருநங்கைகளுக்கு சேலை வாங்கி தரவும்.

கேட்டை: சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 11 வாரம் செவ்வாய் கிழமை சென்று வழிபாடு செய்தால் கடன் சுமை குறையும்.

மூலம்: திருச்செந்தூர் சென்று கடலில் குளித்து விட்டு முருகனை பார்க்காமல் வரவும்.

பூராடம்: சஷ்டி தியன்று பழனி முருகனை தரிசனம் செய்து வரவும்.

உத்திராடம்: துப்புரவு பனியாளருக்கு சாப்பாடு வாங்கி தானமாக தரவும்.

திருவோணம் : தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை சாற்றி வழிபடவும்.

அவிட்டம்: ஈச்சனாரி விநாயகர் ஆலயம் சென்று வழிபாடு செய்யவும்.

சதயம்: வருடதிற்கு மூன்று முறை ஆறுபடை முருகரை தரிசனம் செய்து வந்தால் கடனை அடைக்க வழி கிடைக்கும்.

பூரட்டாதி: தாய்,தந்தைக்கு மாதம் ஒருமுறை பாதபூஜை செய்யவும்.

உத்திரட்டாதி: கோட்டை மாரியம்மன் ஆலயம் சென்று 21 எலுமிச்சை பழ மாலை சாற்றி வழிபாடு செய்யவும்.

ரேவதி : திருச்செந்தூர் சென்று கடலில் குளித்து முருகரைவழிபடவும் ( பௌர்ணமி அன்று)

Leave a Comment

error: Content is protected !!