திருப்பாவை பாடல் 2 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

திருப்பாவை பாடல் 2

திருப்பாவை பாடல் 2

நோன்பு நோற்க விரும்புவோர்,முக்கியமாக மேற்கொள்ளவேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்.

வஸந்த ராகம், ஆதிதாளம்

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து – ஏலோர் எம்பாவாய்.

திருப்பாவை பாடல் 2

எளிய தமிழ் விளக்கம்:

பூமியில் வாழ்பவர்களே, நம்முடைய பாவை நோன்புக்கு செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள்! பாற்கடலில் உறங்குகிற பகவானுடைய திருவடிகளைப் பாடுவோம். நெய், பால் இவற்றை உட்கொள்ளமாட்டோம். விடியற்காலை குளித்துவிட்டு, கண்ணுக்கு மை இட மாட்டோம், கூந்தலுக்கு மலர் கிடையாது. செய்யக்கூடாத காரியங்களைச் செய்யமாட்டோம். கோள் சொல்லமாட்டோம்.
தானத்தையும் பிச்சையையும் எங்களால் முடிந்தவரை கொடுப்போம்.இப்படிப் பிழைக்கும் வழியை எண்ணி சந்தோஷப்படுவது நம் பாவை நோன்பு.


எளிய ஆங்கில விளக்கம்:

Thiruppavai – 2 – Raga : Vasantha, Adi

O people of the world, hear what austerities we undertake during the pavai-nonbu
Singing the praise of the Ocean reclining lord.
We will abstain from milk and ghee and bathe before dawn.
We shall not line our eyes with collyrium, nor adorn our hair with flowers.
Refraining from forbidden acts, avoiding evil tales about others, we
give alms and charity in full measure and
pray for the elavation of spirit. Let us rejoice

Leave a Comment

error: Content is protected !!