திருப்பாவை பாடல் 6
பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்.
சங்கராபரணம் ராகம், மிச்ரசாபு தாளம்
புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு
கள்ளகச சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்து – ஏலோர் எம்பாவாய்.
எளிய தமிழ் விளக்கம்:
பறவைகள் கூவிவிட்டன. கருடனை வாகனமாகக் கொண்ட விஷ்ணுவின் கோயிலில் வெண்சங்கொலி பெரிய ஓசையிட்டு அழைப்பதைக் கேட்க வில்லையா? இளம் பெண்ணே! எழுந்திரு. பூதனா என்னும் அரக்கியின் நச்சு முலையை உறிஞ்சி,
வஞ்சகமான சகடாசுரன் வண்டி உருவில் வந்த போது கட்டுக் குலையும்படி காலால் உதைத்தான். பாற்கடலில் பாம்பின் மேல் துயில் கொண்டு, உயிர்களுக்கெல்லாம் வித்தானவனை முனிவர்களும் யோகிகளும், ‘ஹரி! ஹரி!’ என்று கூறும் ஒலி எங்கள் உள்ளம் புகுந்து குளிர்ந்தது.
எளிய ஆங்கில விளக்கம்:
Thiruppavai – 6 – Raga : Sankarabharanam, Misra Chapu
Look the birds have begun their morning song
O young girl arise! Do you not hear the great boom of the white
temple conch
He who drained the ogress Putana’s poisoned breasts and
kicked the cart that ran amuck,
He lies reclining in the Ocean.
Sages and Yogis hold him in their hearts and gently utter “Hari”.
This sound enters our hearts and makes us rejoice.