Homeஆன்மிக தகவல்திருப்பாவைதிருப்பாவை பாடல் 9 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 9 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் – 8

மாமன் மகளை எழுப்பிட, கண்ணன் புகழைப்பாடுவோம்!

ஹமீர்கல்யாணி ராகம், ஆதிதாளம்

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்,
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
நாமம் பலவும் நவின்று – ஏலோர் எம்பாவாய்

எளிய தமிழ் விளக்கம்:

தூய்மையான மணிகளைக் கொண்ட மாளிகையில் எங்கும் விளக்குகள் எரிய, வாசனைப்புகை வீசப் படுக்கையில் தூங்கும்
மாமன் மகளே! கதவை திறந்துவிடு. அம்மணி! உன் பெண்ணை எழுப்புங்கள். அவள் ஊமையோ? செவிடோ? சோம்பேறியோ?
அல்லது மந்திரத்தால் மயங்கித் தூங்குகிறாளோ? மாயன், மாதவன், வைகுந்தன் என்ற பகவானின் நாமங்கள் பலவற்றைச் சொல்லி நற்பயன் அடைய வேண்டியிருக்கிறது. சீக்கிரம் உன் மகளை எழுப்பு.

எளிய ஆங்கில விளக்கம்:

Thiruppavai – 9 – Raga: Hamir Kalyani, Adi

O cousin sleeping in a sparkling hall on a soft bed with lamps glowing
and incense wafting all around!
Please unlatch your belled door.
My good Aunt, could you wake your daughter
Is she dumb, or deaf or fatigued or has a spell been cast on her ?
Let us chant Mayan, Madhavan, Vaikundan and many such names
Come, join us!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!