ஆங்கில புத்தாண்டு 2025
நிகழும் குரோதி வருடம்- மார்கழி மாதம் 17-ம் தேதி, புதன்கிழமை, சுக்கிலபட்சத்து பிரதமை திதி, பூராட நட்சத்திரம், வியாகாதம் நாம யோகம், பவம் நாமகரணத்தில், கன்னி லக்னத்தில், சித்தயோகத்தில், நேத்திரம் ஜீவனம் மறைந்திருக்க, பஞ்சபட்சியில் கோழி வலுவிழந்திருக்கும் நேரத்தில் 2025 புத்தாண்டு பிறக்கிறது.
கர்ம வினைக் கிரகம் சனிபகவானின் ஆதிக்கத்தில் இருந்த 2024-ம்(2+0+2+4=8) ஆண்டு பலவிதமான இழப்புகளையும், ஏமாற்றங்களையும், இயற்கைச் சீற்றங்களையும், உயிரிழப்புகளையும் தந்தது. அத்துடன் மக்களிடையே வேலை இல்லா திண்டாட்டம், போதைப் பொருள்களின் ஆதிக்கம் என எதிர்மறை விளைவுகளால் கவலையும் கொடுத்தது. ஆனால் இனிவரும் 2025ம்(2+0+2+5=9) ஆண்டு மக்களிடையே சுய ஒழுக்கத்தையும், மன நிம்மதியையும் அள்ளித்தரும். வேலை வாய்ப்பு பெருகும்.செவ்வாயின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், சட்டம் ஒழுங்கு சீராகும். ராணுவத்தின் கை ஓங்கும். தீவிரவாதிகள் ஒடுங்குவர். பல குடும்பங்களிலும் பிறந்திருந்த சகோதரர்கள் ஒன்று சேர்வார்கள். பூமி விலை உயரும். காடுகள் செழிப்படையும்.
லக்னத்தில் கேது அமர்ந்திருக்க குரு பகவானை பார்ப்பதால், ஆன்மீகம், தெய்வீகம் வளரும். சந்திரனுக்கு பத்தில் கேது இருப்பதால், கோயில் கும்பாபிஷேகங்கள் அதிகம் நடக்கும். கோயில் சொத்துக்கள் மீட்கப்படும். மலைக்கோயில் பலவற்றுக்கும் பாதை அமைக்கப்படும். லாபாதிபதி சந்திரன் நான்கில் இருப்பதால் சாலை வசதிகள் பெருகும்.
சனிபகவானின் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் திரவ நிலை ஏரிபொருள்களான பெட்ரோல், டீசல் வரத்து குறையும். சமையல் எரிவாயு தட்டுப்பாடு வரலாம். நிலக்கரி சுரங்கங்கள் பாதிப்பு அடையும். 3 மற்றும் 8ம் வீட்டுக்குரிய கிரகமான செவ்வாய் நீசமாகி 11ல் நிற்பதால் அச்சுத்துறை நலிவடையும். சந்திரனுக்கு 8ல் செவ்வாய் இருப்பதால் வெடி விபத்துக்கள் அதிகரிக்கும். கடற்கரை நகரங்களில் கலவரங்கள் வெடிக்கும். ஆடு, மாடு போன்ற கால்நடைகள் பெருகும். பால் உற்பத்தி அதிகரிக்கும். கரும்பு சாகுபடியும் அதிகரிக்கும். கிளி, மயில் போன்ற பட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாகன உற்பத்தி மற்றும் விற்பனை கணிசமாக உயரும். பேட்டரி மற்றும் சோலார் பயன்பாடு அதிகரிக்கும்.
செவ்வாய் நீசமானதாலும், லக்னத்திற்கு ஏழில் நிற்கும் ராகுவாலும் வாகன விபத்துக்கள் அதிகரிக்கும். போதை பொருள்களை கட்டுப்படுத்த சட்டங்கள் கடுமையாக்கப்படும்.
பிப்ரவரி முதல் மே மாதம் சுக்கிரன் மீனத்தில் தொடர்வதால் கலைத்துறையினர் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொள்வார்கள். தியேட்டர்கள் நலிவடையும். புதன் மூன்றில் நிற்பதால் கணினி துறை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சிறந்து விளங்கும். தங்கம் விலை உயரும். சந்திரன் மற்றும் சூரியனின் நிலையால் தானிய விளைச்சல் அதிகரிக்கும். மழை பொழிவும் திருப்திகரமாக இருக்கும். செஸ், ஹாக்கி, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் இந்தியா சாதிக்கும். உலக நாடுகளுக்கு இடையே போர் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தோன்றும்.
மொத்தத்தில் இந்த 2025 ஆம் ஆண்டு மக்களுடைய மன உறுதியை தருவதுடன் எல்லாவற்றிலும் மாற்று வழியை தேட வைப்பதாக அமையும்.
ஆங்கில புத்தாண்டு பலன்கள் -2025 | 12 ராசிக்குரிய பலன்கள்
- ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025 – மேஷ ராசி – Click Here
- ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025 – ரிஷப ராசி – Click Here
- ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025 – மிதுன ராசி – Click Here
- ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025 – கடக ராசி – Click Here
- ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025 – சிம்ம ராசி – Click Here
- ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025 – கன்னி ராசி – Click Here
- ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025 – துலாம் ராசி – Click Here
- ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025 – விருச்சிக ராசி – Click Here
- ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025 – தனுசு ராசி – Click Here
- ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025 – மகர ராசி – Click Here
- ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025 – கும்ப ராசி – Click Here
- ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025 – மீன ராசி – Click Here